ஆவிக்குரிய புத்திரசுவிகாரம் SPIRITUAL ADOPTION 56-09-23 Jeffersonville Indiana U.S.A. சகோதரன் நெவில் உங்களுக்கு நன்றி. காலை வணக்கம் நண்பர்களே. காலை வேளையில் இங்கிருந்து கொண்டு மேய்ப்பர் கூறிய அறிமுக உரையைக் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி உடையவர்களாக இருக்கிறோம். அது மிகவும் சிறப்பாக இருந்தது. ஓ, உங்களுக்கு தெரியும், குதிரைகளைப் பற்றி பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள், அவைகளுக்கு கடிவாளம் போட்ட உடனேயே, ஏதோ வேலை வருகிறது என்பதை அறிந்து கொள்ளும். நல்லது, அது கர்த்தர் நம்மை ஒரு பணி செய்யும் குதிரையாக உருவாக்கியுள்ளார், ஆகவே நாம் அதில் பணியாற்ற முடியும், அதற்காக நான் மிக்க மகிழ்ச்சி உள்ளவனாய் இருக்கிறேன். ஆகவே நாம் ஒருபோதும் அதைச் செய்ய வேண்டும் என்று நமக்கென்று ஒதுக்கப்படுமானால், அந்த ஏதோ ஒன்றைச் செய்வதில் நாம் ஒருபோதும் மிகுந்த களைப்படைவதில்லை. என்றாலும் கூட, இன்று மிகவும் களைப்படைந்தவனாக இருக்கிறேன். கடந்த சில நாட்களில் நான் மிகமோசமான நேரங்களைப் பெற்றிருந்தேன். 2. கலிபோர்னியா செல்வதற்கு வாகனத்தின் நாற்காலியில் பயணம் செய்ய வேண்டியதாயிற்று. மேலும் நான் உங்களுக்கு கூறுகிறேன், அங்கு போய் சேரும் மட்டுமாக, ஒருவிதமான நடுக்கம் என்று கூறுவோமே அத்தகையப் பதறல் உண்டாயிருந்தது. அங்கு போய்ச் சேருவதற்கு ஐம்பத்து-மூன்று மணி நேரமாகும், காலையில் இரண்டு மணிக்கு அங்கு போய்ச் சேர்ந்தேன். ஐந்து மணிக்கு நான் எழுந்து வானொலி நிகழ்ச்சியில் பிரசங்கிப்பதற்குச் செல்ல வேண்டும். பின்பு கிறிஸ்தவ வியாபாரிகள் ஐக்கியம், அவர்களுடைய சர்வதேசக் கூட்டத்தில் நான் மறுபடியும் பிரசங்கம் செய்ய வேண்டும். அதன் பின்னர், அன்று சாயங்காலமே பெரிய பாப்டிஸ்டு கூடாரத்தில் நான் பிரசிங்கித்தேன், அதன் பின்னர் அவர்கள் மத்தியில், அந்த நாள் இரவில், அவ்வாறே ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் பிரசங்கிக்க வேண்டும், கடைசியாக ஏஞ்சலஸ் தேவாலயத்தில் திங்கள் இரவு முடிவடைந்தது. அதற்குப்பின் பதினொன்று மணிக்கு ஒரு இரயில் வண்டியைப் பிடித்து, வீடு வந்து சேருவதற்கு அறுபத்துநான்கு மணி நேரம் பிடித்தது. ஆகவே முந்தின நாளுக்கு முன் தினம் இங்கு வந்தடைந்தேன், சற்று அதை கற்பனை செய்து பாருங்கள். நான் வந்து ஜனங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்பதற்காக, புதிய அழைப்புகள் வந்துள்ளன. 3. நேற்று என் மனைவி ஐம்பது அல்லது அதற்கும் மேலான அழைப்புகளை பதிவு செய்து வைத்துள் ளார்கள், நேற்று காலை நேரத்தில் மட்டும், பாருங்கள்? ஐம்பதுக்கும் அதிகமான புதிய அழைப்புகள்... உண்மையாகவே, அவைகள் அனைத்தும் உள்ளூர் அழைப்புகள் அல்ல, அவைகள்... அவைகள் பல தேசங்களில் இருந்து வந்த அழைப்புகள் ஆகும். ஆனால் "சற்றே, வருவீர்களா - ஃப்ளோரிடாவிற்கு நீங்கள் வரமுடியுமா? இங்கே உங்களால் வரமுடியுமா? இது லூயிவில்லிலிருந்து வந்த அழைப்பாகும், இது... ஒருநாள் காலையில் மட்டும் அவைகள் ஐம்பத்து மூன்று அழைப்புகளாக இருக்குமானால், அவைகளில் எதைத் தெரிந்து கொள்வது?" ஆகவே நீங்கள் அதை கற்பனை செய்து பாருங்கள். 4. ஆகவே நேற்று மதியத்திற்கு மேல், நமக்கு பிரியமான சில நண்பர்களை பார்ப்பதற்காக வந்தேன். பிசாசின் நோய் எப்படிப்பட்டதாயிருக்கிறது. ஒரு வாலிப மனிதன். அவனை நான் பல வருடங்களாக அறிவேன், ஆரோக்கியமான சரீர அமைப்பைக் கொண்டவன், ஓட்டப்பந்தய வீரனைப் போல காட்சியளிக்கும் வாலிப மனிதன். ஆனால் இப்போது அவன் பார்ப்பதற்கு என்னுடைய வயதையும் தாண்டி தொண்ணூறு வயதை கடந்தவன் போல இருக்கிறான். அவன் ஹென்றிவில் என்னுமிடத்தில் படுத்த படுக்கையாய் மரிக்கும் தருவாயில் இருந்தான். என்னுடைய நல்ல நண்பர் சகோதரன் நெவில் அவர்களுக்கு ஒரு நண்பனாக இருப்பவன், அவனுடைய பெயர் கெர்மிட் ஸ்பர்ஜன் (Kermit Spurgeon]; அவனுடைய தந்தையார் ஒரு சுவிசேஷப் பிரசங்கியாகவும், ஒரு பள்ளியின் ஆசிரியராகவும் இருப்பவர், பலசாலியான சிறந்த ஒரு மனிதன் ஆவார். 5. அந்தப் பையன் மரித்துக் கொண்டிருக்கிறான் என்று சகோதரன் நெவில் கூறிய பிறகு, நான் வீட்டிற்குள் நடந்து சென்றேன், அவனுடைய ஆத்தும இரட்சிப்புக்காக, நேற்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வினிடம் வழிநடத்தும் ஒரு மகத்தான சிலாக்கியத்தை நாங்கள் கொண்டிருந்தோம். அவனுடைய மனைவியும், நானும் ஒருமனப்பட்டவர்களாய், அவனுக்காக உத்தம மாய் ஜெபித்தோம். ஒரு புற்றுநோய் இருநூறு பவுண்டுகள் அதற்கும் அதிகமாய் அவனுடைய எடை குறையும் அளவிற்கு சரிரத்தைத் தின்றுவிட்டிருந்தது, அறுபது பவுண்டுகள் எடை இருப்பானோ என்று நான் சந்தேகிக்கிறேன். ஆகவே நாங்கள் விசுவாசமுடையவர் களாய், தேவன் அவனைச் சுகப்படுத்துவார் என்பதை பற்றிக் கொண்டு ஜெபித்தோம். என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை அறியாதவர்களாக இருந்தோம், ஆனால் அவன் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்துவிட்டான் என்பதை மட்டும் அறிந்தவர் களாய் இருந்தோம். அந்த செய்தி அவனுடைய வயது சென்ற ஏழையும் குருடாயிருக்கும் தகப்பனாரை சென்றடைந்த போது, அவனுக்காக அநேக வருடங் களாக ஜெபித்தவர் அவர், என்னவெல்லாம் எண்ணி யிருப்பார் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன், நீண்டகால ஜெபத்திற்குப் பின்... பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து" அவனுக்கு முன்பாக அவர் ஒரு சரியான உதாரணமாக இருந்தார் என்பதை நான் அறிகிறேன். 6. அங்கிருந்து திருமதி.ஸ்லாட்டர் வாழுகிற நியூ ஆல்பனி என்ற இடத்திற்குச் சென்றோம், மருத்து வர்கள் அவள் ஆறு மணி வரைக்கும் தான் ஜீவிப்பாள், அதன் பின்னர் அவள் மரித்துப் போவாள் என்று நேரம் குறித்து, அவளைக் கைவிட்டு விட்டார்கள். ஆகவே வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து காத்துக் கொண்டிருப்பது மிக, மிக பரிதாபமான நிலையாக இருந்தது. 7. அங்கே ஒரு வாலிபன் என்னுடைய வீட்டிற்கு அடுத்த வீட்டில் வசித்து வருகிறான். அவன் அங்கும் இங்குமாக நடந்து திரிவான், திடகாத்திரமான பையன், பெல் தொலைபேசி நிறுவனத்திற்காக பணியாற்று கிறான், இருபது வயது சற்று அதிகமாகக் கூட இருக்கலாம், மூன்று அல்லது நான்கு பிள்ளைகளுக்கு தகப்பனானவன். அவனுடைய சிறிய பெண் நேற்றையத் தினம் கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டாள். அவளுடைய கை உணர்வற்ற ஒரு நிலையை அடைந்ததை உணர்ந்தாள், அது அவளை முடக்கிப் போட்டு விட்டது. அவளில் என்ன தவறு, கோளாறு என்று கூட அவர்களுக்கு தெரியாது. அங்கே அவள் படுத்த படுக்கையாய் கிடக்கிறாள். 8. அங்கு தான் அது, ஒன்று வருகிறது, தொடர்ந்து மற்றும் ஒன்று வருகிறது, எல்லாக் கைகளிலும் வியாதி வந்து விடுகிறது. அதற்கு ஒரு வழி உண்டு என்பதினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் இங்கே நித்திய காலமாய்த் தங்கப் போவதில்லை என்பதினால் மகிழ்ச்சி அடைகிறேன், நீங்களும் அவ்வாறு மகிழ்ச்சி அடையவில்லையா? நான் இந்த புழுவும் பூச்சியும் நிறைந்த வீட்டில் நித்திய காலமாய் வாழ்வேனேயானால், நாம் என்ன செய்வோம்? அங்கே ஒரு திறந்த வாசல் உண்டு என்பதினால் நான் மிகவும் மகிழ்ச்சியுள்ளவனாக இருக்கிறேன். இந்த பூமியைக் குறித்த காரியமும் அதுதான், இது கரையான் வீடு என்பதை தவிர ஒன்றும் இல்லை. அது... எல்லாமும் சரியாய் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைக்கும் வேளையில், அதனுடன் ஏதோ ஒன்று வருகிறது, மேலும் வேறொன்றும் இங்கே கூட வருகிறது. ஆனால், இவைகள் எல்லாவற்றிலிருந்தும் வெளியேற ஒரு வழி உண்டு என்பதினால் நான் மகிழ்ச்சியடைகிறேன். இயேசு கிறிஸ்து வந்து ஒரு வழியை உண்டாக்கினார், தப்பித்துக் கொள்ள ஒரு பாதையை உண்டு பண்ணினார் என்பதினால் மகிழ்ச்சியடைகிறேன். 9. ஆகவே இந்த காலை வேளையில், என்னுடைய நேசத்திற்குரிய சகோதரி காக்ஸ்(COX) அவர்கள், "யாரோ ஒருவர் வந்து கொண்டிருப்பதாகவும், மற்றும் அந்தப் பகுதியைச் சுற்றிலும் உள்ள ஜனங்கள் நீண்ட நேரத்திற்கல்ல, சில நிமிடங்கள் மட்டும் ஜெபம் செய்து கொள்ள கேட்டுக் கொண்டதாகவும்" சொன்னார்கள். நான் ஆராதனை செய்வதற்கு முன்பாக அவர்களுக்காக ஜெபிப்பேன். 10. அதன் பின்பு அவர்கள் தங்கள் இருக்கை களுக்கு செல்ல வேண்டுமானால், இங்கே தங்கியிருக்க வேண்டும் என்று விரும்புகிற மற்றவர்களுக்கு இந்த காலை வேளையில் சுருக்கமான செய்தியை கொடுப்பேன். தொண்டை கரகரப்பாக இருக்கிறது. இந்தக் கூட்டம் முடிந்த உடனையே வேறொரு கூட்டத்திற்கு நான் செல்ல வேண்டும். ஆகவே நான்... மேலும் சிக்காகோ கூட்டங்கள் அடுத்த சனிக்கிழமை தொடங்குகிறது. 11. இந்த வாரத்தில் நம்முடைய மகத்துவமான சகோதரன் பில்லி கிரஹாம், லூயிவில் என்னும் இடத்திற்கு வருகை தருகிறார். அவரை ஏற்றுக் கொள்வது ஒரு மகத்தான சந்திப்பாக இருக்கும், தேசத்தின் இந்த பாகத்திற்கு அந்த மணி நேரம் வந்துவிட்டது என்று நான் எண்ணுகிறேன். அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் சிக்காகோ என்னும் இடத்தில் கூட்டத்தை தொடங்கும் அதே நேரத்தில் அவர் லூயிவில் என்னும் இடத்தில் தன்னுடைய கூட்டத்தைத் தொடங்குகிறார். ஆகவே நான் மறுபடியும் இங்கே வருவேன், இருப்பினும், நான்-நான் அவர் இங்கிருக்கும் வேளையில் அவரை நான் நேரடியாக சந்திக்க விரும்புகிறேன். சில நண்பர்கள் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தப் போகிறார்கள், நான் வெளிநாடுகளில் அதே பட்டணத்தில் இருந்திருக்கிறேன், அநேக வெவ்வேறான இடங்களில், ஆனால் அப்படி இருந்தும் நாங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. 12. மேலும் நான்-நான் இந்த லூயிவில் என்னும் பட்டணத்தில், இந்த காலை வேளையில் இந்த கூட்டத்தை தங்கள் இருதயங்களில் ஏற்றுக் கொள்ளும்படி கூடியுள்ள இந்த ஜனங்களையும் மற்றும் இந்தச் சபையினரையும் மிகவும் உத்தமமாக கேட்டுக் கொள்கிறேன். 13. எப்பொழுதும் போல நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் அனைத்து மதுபான வகைகளும் எண்பத்தி ஏழு சதவீதம், கென்டக்கியில் உள்ள லூயிவில் என்னும் பட்டணத்தில் இருந்தே வருகிறது என்பதை அறிவீர்களா? அது-அமெரிக்க ஐக்கிய நாடுகளிலேயே குடிக்கப்படுகிறது, எண் பத்து- ஏழு... கென்டக்கியில் உள்ள லூயிவில் என்னுமிடத்தில் தான் ஏறக்குறைய தொண்ணூறு சதவீதம், புகையிலை மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்கள் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது சாத்தானுடைய இருப்பிடமாக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நிச்சயமாக அது அவ்வாறு தான் உள்ளது, அது நிச்சயமாக. 14. உலகத்திலேயே கடினமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது, இந்த பகுதி சுற்றிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக உடைக்கப்பட வேண்டும். இந்த தேசத்தை உடைப்பதற்காக எத்தனையோ பேர் கண்ணீரோடு வெளியே புறப்பட்டுச் சென்று இந்த தேசத்தை உடைப்பதற்கு முயற்சி செய்தீர்கள், இந்த பட்டணங்கள் எல்லாம் கர்த்தராகிய இயேசுவினிடம் விழ வேண்டுமே? கவனியுங்கள், எரிக்க்ஷன் (Ericson) மற்றும் அநேகர் வெளியே புறப்பட்டுச் சென்று கண்ணீர் சிந்த நடந்தார்கள், எவ்வளவாய் அவர்கள் முயற்சி செய்தனர், தங்களால் கூடுமட்டும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்காக, முயற்சி செய்தார்கள். மேலும் மேலும் முயற்சி செய்தார்கள். ஜான் ஸ்பரவுல் [John Sproul] போன்றோர் மகிமையின் களஞ்சியத்தை அங்கே வெடிக்க செய்தார்கள், இயேசுகிறிஸ்துவுக்காகக் காரியங்களை உடைப்பதற்காக, தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவாய் முயற்சி செய்தார்கள். மற்றும் அநேகர் விழுந்து கொண்டிருக்கும் இந்த பட்டணங் களின் ஊடாக கடந்து சென்று பிரசங்க பீடத்தில் நின்றார்கள், எவ்வளவாய், எப்படியெல்லாம் முயற்சி செய்தார்கள், இயேசு கிறிஸ்துவிற்காக அவர்களால் அதை உடைக்க முடியவில்லை. 15. இப்போது இன்று மார்க்க சம்பந்தமாக, உலகத்தில் நன்றாக அறியப்பட்ட மனிதர்களில் பில்லி கிரஹாமும் ஒருவர் என்று நான் எண்ணுகிறேன்... நான், என்னுடைய கருத்தின் படி... உண்மையாகவே நாம் ஆயர்கள் மற்றும் பேராயர்களையும் பெற்றுள்ளோம், ஆனால், என்னுடைய கருத்தின் படி அவர் ஒரு சுவிசேஷ பிரசங்கியாவார், ஒரு தேவனுடைய மனிதன் அவர். ஆகவே-ஆகவே மேலும், நான் எண்ணுவ தெல்லாம்... அவர்... கிறிஸ்தவ வீரர்கள் என்ற நிலையில் ஒன்று சேர்ந்து, நம்மை நாமே அர்ப்பணித்தும், மற்றும் நம்முடைய இருதயங்களை ஒன்று சேர்த்தும், ஏகமனதாய் இதற்கு முன்னும் இல்லாத அளவிற்கு அந்தக் கூட்டங்கள் நடக்க நாம் ஜெபிப்போம். தேவன் எப்படியாயினும் அல்லது வேறு வழியில் நமக்கு ஆத்துமாக்களைத் தரவேண்டும் என்று கேட்பேன். சாத்தானுடைய இருப்பிடமாகிய இவ்விடத்தை தேவன் உடைத்துப் போட ஜெபிப்பேன். ஆகவே அதன்நிமித்தம் மதுபான ஆலைகள் அனைத்தையும் அவர்கள் மூட வேண்டும், புகையிலை தயாரிக்கும் அலுவலகங்கள் எரிக்கப்பட வேண்டும், சபைகள் நிரம்ப வேண்டும், உண்மையாகவே பழங்காலத்து பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலைப் பெற வேண்டும். கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. 16. இப்போது, சற்று வித்தியாசமான ஏதோ ஒன்றை நான் பெற்றுள்ளேன், சிறிதளவு வழக்கத்திற்கு மாறாக தொடங்க இருக்கிறேன். என்னுடைய சகோதரன் ஒரு சிறு குழந்தையை கொண்டுள்ளார், அவர்கள் கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்ய விரும்புகிறார்கள். கர்த்தருக்கு சித்தமானால், வியாதியஸ்தர் களுக்கு ஜெபிப்பதற்கு முன்பாக நாம் பிரதிஷ்டை செய்யலாம் என்று எண்ணுகிறேன். சகோதரி கெர்ட்டி (Sis.Gertei) பியானோ இசைக் கருவியினிடம் வருவார்கள், சிறு குழந்தைகள் உள்ள அனைவரும் வாருங்கள்... 17. இப்போது, பரிசுத்த வேதாகமத்தில் நாம் கற்பிக்கப்பட்டபடி... இப்போது, நிறைய-நிறைய ஜனங்கள் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று அழைக்கிறார்கள், அவர்கள் மேல் சிறிதளவு தண்ணீரைத் தெளிக்க வேண்டும், அதை அவர்கள் குழந்தை ஞானஸ்நானம் என்று அழைக் கிறார்கள். நல்லது இப்போது, அது அவ்வாறே இருக்கட்டும். அது குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது, மேலும் நான்-நான் அது சரியாய் உள்ளது என்று நிச்சயமுடையவனாய் இருக்கிறேன், மற்றவர்கள், வேறு வழிகளை வைத்துள்ளனர் அதன்படி அதை செய்கிறார்கள், மேலும்... ஆனால் நாம் எப்பொழுதும் விரும்புகிறது என்னவென்றால், எவ்வளவுக் கெவ்வளவு நாம் பரிசுத்த வேதாகமத்தில் தரித்திருக்கிறோமோ அவ்வழியில் அதை நாம் செய்கி றோம். அதைச் செய்வதற்கு பரிசுத்த வேதாகமத்தின் வழி என்னவென்றால்... குழந்தைகளுக்கு அவ்வாறு செய்தார்கள் என்பதற்கான காரியம் எதுவும் பரிசுத்த வேதாகமத்தில் இல்லை, ஒருபோதும் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை, நானும் கூட அவ்வாறு செய்ததில்லை, பழைய ஏற்பாட்டில் அவர்கள் விருத்த சேதனம் செய்தார்கள். 18. ஒன்றிரண்டு மூப்பர்கள் இந்த சகோதரியைக் கீழே சற்று ஒரு பக்கமாய் கொண்டு சென்றால் நலமாயிருக்கும், உங்களுக்குச் சித்தமானால் அவ்வாறு செய்யுங்கள், பிரதிஷ்டை செய்யும் வரைக்கும், இந்தச் சகோதரி, தூக்குப்படுக்கை [Stretcher) வண்டியில் இருக்கும் அவர்களை அங்கு இருக்கச் செய்யுங்கள். ஆகவே அன்பான சகோதரியே, அதை பொருட் படுத்தாதீர்கள். அது சற்று நேரத்திற்குத் தான்... 19. ஆகவே அன்று பழைய ஏற்பாட்டில் அவர்கள்- அவர்கள் குழந்தையை விருத்தசேதனம் பண்ணி னார்கள். பழைய ஏற்பாட்டுக் காலத்தில்... அவர்கள்- அவர்கள் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்தார்கள். 20. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் அவர்கள் செய்வதற்கென்று ஒரே ஒரு வழி தான் உண்டு, அதையே செய்தார்கள். அவர்கள் சிறு குழந்தைகளை கர்த்தராகிய இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். அந்த குழந்தைகளை அவர் தம்முடைய கைகளில் ஏந்தி உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார், மேலும் அவர், "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள், பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" என்றார். 21. இப்போது, இங்கு வேறு யாராவது குழந்தைகளையுடைய தாய்மார்கள், அவர்கள் தங்கள் குழந்தைகளைக் கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்ய விரும்புபவர்கள் இருக்கிறார்களா? இப்பொழுதே அவ்வாறு பிரதிஷ்டை செய்வதற்கு மகிழ்ச்சி அடைகிறோம், மேலும் இப்போது, நாம் மிகவும் கவனமாயிருப்போமாக... 22. இப்போது, இந்தச் சிறுவனின் பெயர் என்ன? (" இராபர்ட் லின்" என்று அந்த சகோதரன் சொல்லு கிறார்-ஆசி) சிறு பையன், இராபர்ட் லின். இப்போது, அது மிகவும் சிறப்பான பெயர். இப்போது, இது... இந்த பையனை நீங்கள் தத்தெடுத்திருக்கிறீர்கள்? என்று நம்புகிறேன். 23. இது ஒரு தாயின் இருதயம் குழந்தையைப் பற்றி எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது. இவ்வாறு இக்குழந்தைகளைப் பற்றி என்னும் போது, குழந்தையே இல்லாதவர்கள், எனினும் அவ்வாறு ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள், அவர்கள் இக்குழந்தையை தத்தெடுத்துள்ளனர். நீங்கள் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் என்பதை உணர்கிறீர்களா? தேவன் நம்மை அவ்வளவாய் நேசித்தார், அவர் நம்மை அவருடைய குமாரன் கிறிஸ்து இயேசுவின் மூலமாக தத்தெடுத்துள்ளார்; நாம் அனைவரும் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள். ஞாபகம் கொள்ளுங்கள், இந்த தந்தையும், தாயும் இந்த சிறு குழந்தையை குறித்து எண்ணமுடையவர்களாய், இந்த குழந்தை செல்வதற்கு எந்த வீடும் இல்லை என்பதால், அது வளர்வதற்கும் மற்றும் பராமரிக்கப்படவும் அதற்கு ஒரு வீட்டைக் கொடுத்தார்கள். தேவன் நமக்கு ஒன்றைத் தந்தார். 24. இது தத்தெடுக்கப்பட்ட பிள்ளை. இந்த குழந்தையின் பெயர் இராபர்ட் லின் பிரன்ஹாம் என்பதாகும், மிகவும் அழகுவாய்ந்த சிறு குழந்தை. இப்போது, நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோமா? 25. எங்களுடைய விலையேறப்பெற்ற பரலோகப் பிதாவே, நாட்கள் கடந்து விட்டன, பழங்காலத்தைப் போல, எவ்வளவோ தகப்பன்மார்கள் தாய்மார்கள் தங்களுடைய சிறு குழந்தைகளை உம்முடைய கரத்தில் தூக்கிக் கொடுத்திருப்பார்கள். நீரும், "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோக இராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" என்று கூறியிருக்கிறீர். வீடு இல்லாமல் இருந்த இந்தச் சிறு குழந்தைக்கு, வீடு கொடுக்கப்பட்டிருக்கிறது, மேலும் அவர்களுடைய இருதயத்தில் இந்தக் குழந்தையின் மீது அன்பு செலுத்தத்தக்கதான ஒரு இடத்தை உருவாக்கினீர். 26. மேலும், பிதாவே இந்தக் குழந்தையை வளர்க்கும் இந்தத் தாயையும், தந்தையையும் ஆசீர்வதியும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அது ஒரு ஜெபவீட்டில் வளர்க்கப்படட்டும், சபைக்கு செல்ல வேண்டும் என்று போதிக்கப்படுவானாக, கர்த்தராகிய இயேசுவுக்காக ஜீவிக்கட்டும். அன்புள்ள பரலோக பிதாவே இதை ஆசீர்வதியும். 27. மேலும் இப்போது, இந்தக் காலை வேளையில் அழிவுள்ள சரிரத்தில் நாங்கள் நின்று கொண்டிருப்பது போல நீர் இந்த பூமியின் மீது இருப்பீரானால், அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை உம்முடைய கரங்களில் கொடுத்திருப்பார்கள்; ஆனால் நீரோ பரலோகத்திற்கு சென்று விட்டீர், நீர் திரும்பி வரும் வரை, இந்த ஊழியத்தை நாங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று எங்களை பிரதிஷ்டை செய்துள்ளீர், மேலும் பிதாவே, என்னுடைய சொந்த இரத்த சம்பந்தமான சகோதரன் போல, குழந்தையை என்னுடைய கரங்களில் கொடுத்துள்ளார்கள், நான் கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடத்தில் கொடுக்கிறேன், இந்தக் குழந்தையை ஆசீர்வதியும், அது ஜீவித்து ஆரோக்கியமாக இருக்கட்டும், பலசாலியாக இருந்து உம்முடைய ஒரு ஊழியக்காரனாய் வளரட்டும், தந்தையையும், தாயையும், வீட்டையும் ஆசீர்வதியும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நாங்கள் இந்தக் குழந்தையை உம்மிடத்தில் கொடுக்கிறோம். ஆமென். 28. இந்தக் குழந்தைக்கு ஏக்னஸ் (Agnes) உன்னை ஒரு உண்மையான தாயாகவும், ஜெஸ்ஸி உன்னை ஒரு உண்மையான தகப்பனாகவும் இருக்கும்படி உங்களை ஆசீர்வதிக்கிறேன். மேலும் கர்த்தர் உங்களோடிருப்பாராக. 29. எப்படி இருக்கிறீர்கள்! குழந்தையின் பெயர் என்ன? ["இராபர்ட் டேரில்" என்று அந்த சகோதரி சொல்லுகிறார்கள் - ஆசி] வேறொரு இராபர்ட். நல்லது, அது சிறந்தது. ஒரு இராபர்ட் டேரில். 30. உங்களுடைய பெயர் என்ன? ("இராபர்ட்சன்" என்று அந்த சகோதரி சொல்லுகிறார்கள்-ஆசி) நீங்கள் இளையவர், உங்களுடைய கடைசிப் பெயர் என்ன? ("Mecloud") மெக்லௌட். [ஒலிநாடாவில் காலியிடம்- ஆசி] கதிர்க்கட்டுகளைக் கொண்டுவருகிறோம், கதிர்க்கட்டுகளைக் கொண்டுவருகிறோம், ஓ, நாம் மகிழ்ச்சியோடும் வருவோம், கதிர்கட்டுக்களோடும் வருவோம். காலையில் விதைக்கிறோம், இரவில் விதைக்கிறோம், மதியத்தில் விதைக்கிறோம், பனிமூடும் சாயங்காலத்திலும் விதைக்கிறோம்; காலப்போக்கில் அறுவடைநேரம், பின்னர், கதிர்முற்றும் நேரம், நாம் மகிழ்ச்சியோடும் வருவோம், கதிர்கட்டுக்களோடும் வருவோம். 31. நல்லது, அது மிகவும் சிறந்தது. கதிர்க் கட்டுகளைக் கொண்டு வருகிறோம், அதைத் தான் தந்தைமார்களும் தாய்மார்களும் செய்கிறார்கள், அவர்களைக் கர்த்தராகிய இயேசுவிடம் கொண்டு வாருங்கள். 32. அந்த சகோதரி படுக்கைத் தள்ளுவண்டியில் (Stretcher] படுத்திருக்கிறார்கள், எல்லோரையும் விட மிக மோசமான நிலையில் தோற்றமளிக்கிறாள், நாம் அவ்வாறு தான் பார்க்கிறோம். அவர்கள் ஒரு படுக்கைத் தள்ளுவண்டியில் இருக்கிறார். நாமும் கூட... இங்கு வேறு யாராவது இருந்தால்... ஜெபிப்பதற்கு முன்பதாக, சில நிமிஷங்கள் செய்தியைக் கேட்பதற்குக் காத்திருக்க விரும்புகிறவர்கள், அது மிக, மிக சிறந்தது என்று எண்ணுகிறேன். காத்திருக்க முடியாமல் கூட்டத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று விரும்பு பவர்கள் இங்கு யாராவது ஒருவர் இருந்தால், இப்பொழுதே ஜெபிக்க வேண்டும் என்று விரும்பினால், சற்றே உங்கள் கரத்தை உயர்த்துவீர்களானால் ஜெபிப்பதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். அவ்வாறு ஒருவரும் இல்லையென்றால், ஒரு சிறிய செய்திக்குப் பிறகு உடனடியாக நாம் சுகம் அளிக்கும் ஆராதனையைக் கொண்டிருப்போம், ஞாயிறு பள்ளி வகுப்பு முடிவடையும் நேரத்திற்கு சரியாக இருக்கும் படி முயற்சி செய்வோம். எல்லாம் சரியாய் இருக்கிறது. அதன் பின்னர் நாம் வேத வசனத்தை வாசித்து செய்தியைப் பெற்றுக்கொள்வோம். அதைத் துரிதமாக செய்வோம். அதன் பின் ஜெப வரிசைக்கான நேரத்தை நாம் எடுத்துக் கொள்வோம். 33. மேலும் இப்போது, நாம் தொடங்குவதற்கு முன்பாக, இக்காலை வேளையில் ஆரோக்கியத்துடன் இருக்கும் எல்லோரும், வியாதியஸ்தர்களை நீங்கள் நினைவு கூற வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்க வேண்டும். 34. மேலும் கடந்த நாளில் நான் கலிஃபோர் னியாவை அடைந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியாயிருந் தேன், வெளியே தள்ள முயற்சி செய்யும் அநேகக் கூடாரங்களுக்குச் சென்றேன், கிளிப்டன்-ல் நகரத்தையே அடைத்துக் கொள்ளும் படியாக, தெருக்களின் வெளியில் சாட்சி சொல்ல விரும்பி நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் "சகோதரன் பிரன்ஹாம், ஒரு சமயம் எனக்குப் புற்றுநோய் இருந்தது, நீங்கள் எனக்காக ஜெபித்தீர்கள் என்று கூறினார்கள், நான்-நான் குருடனாய் இருந்தேன். நான் இப்படியாக இருந்தேன்." 35. இவ்வாறு அந்தத் தெரு வழியாக சென்று கொண்டிருந்தேன், அப்படிப்பட்ட ஒரு உணர்வு உடையவனாக இருந்தேன். "தேவனே, இதைக் கடந்து சென்று மறுபக்கம் நாங்கள் செல்லும் போது அது என்னவாக இருக்கும்?" என்று நான் எண்ணினேன். அங்கே பத்தாயிரக்கணக்கான ஜனங்கள் அங்கே நின்று கொண்டு எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள், அந்த மணிநேரம் வரும்போது, அது என்ன ஒரு அதிசயிக்கத் தக்க நேரமாக இருக்கும். ஆகவே, பின்னர் எங்களுடைய சிறிய கடும் முயற்சி, அது இப்போது எங்களைப் பாதிக்கவில்லை. இதற்கு மேல் போக முடியாது என்ற இடம் வரும்வரைக்கும் நாங்கள் சென்றோம், சற்று ஏறக்குறைய பலம் முழுவதையும் இழந்து விட்டோம், மேலும் செல்ல சூழ்நிலைகள் சரியாக இல்லை. 36. பின்னர் சாத்தான் வந்து, "அதனால் என்ன பயன்? அதற்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்னே! என்று கூறினான். 37. நல்லது, அப்படிப்பட்ட காரியங்களை நீங்கள் நினைத்துப் பாருங்கள்; அது ஒட்டுமொத்தத்தையும் மாற்றிப் போடுகிறது. அது... அது காரியங்களை மாற்றி விடுகிறது. 38. இப்போது, வார்த்தையை அணுகுவதற்கு முன்பாக, சற்று நேரம் நாம் மறுபடியும் ஜெபிப்போம். 39. எங்களுடைய பரலோகப் பிதாவே, உண்மை யாகவே, மிகவும் நன்றியுள்ள இருதயத்தோடு உம்மிடத்தில் வருகிறோம், கர்த்தாவே, ஒரு மனிதனின் ஒப்பனையை நீர் அறிந்திருக்கிறீர், அவன் எவ்வளவு பலவீனமுள்ளவனாகவும், அழிந்து போகக் கூடிய வனாகவும் இருக்கிறான் என்பதையும், அவன் எவ்வளவாய் வலிமை இல்லாமல் இருக்கிறான் என்பதையும் நீர் அறிந்திருக்கிறீர். உம்முடைய-ஒரு ஊழியக்காரன் என்ற முறையில், ஒரு மனிதன் என்ற முறையில் மன்னிப்பை கோருகிறேன். ஆனால் கர்த்தாவே, நீர் உம்முடைய கிருபையினால் உம்முடைய ஊழியக்காரர்களாய் இருக்கும்படி எங்களை அழைத்துள்ளீர். இந்தக் காலை வேளையில் எங்களுடைய தகுதியின்மையைக்குறித்து அறிந்து உணர்ந்து இருக்கிறோம், எங்களை ஏற்றுக்கொள்வீர் என்று ஜெபிக்கிறோம், பிதாவே, இன்று, பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணுவீராக, பரிசுத்த வார்த்தைகளைக் கொண்டு பேசியிருக்கிறீர், அவ்விதமே ஆறுதலான வார்த்தைகளால் எங்களுடன் பேசுவீராக. பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு வார்த்தையையும் இருதயத்திற்கு எடுத்துச் சென்று, அதை யாருக்கு தேவையோ, அங்கே அந்த வார்த்தை நங்கூரமிடப்பட்டு, இரட்சிப்பின் விருட்சங்களாக வளர்ந்து மகத்தான சந்தோஷத்தைப் பிறப்பிக்கட்டும், பிதாவே அருளிச் செய்யும். 40.வியாதியஸ்தரையும், தேவையுள்ளவர்களையும் சுகப்படுத்தும். அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம், அநேகர் தூரமான மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து, விடுதிகளில் தங்களுடைய உடைமைகளுடன் தங்கியுள்ளனர், தங்களுக்காகச் ஜெபிக்கப்படும் தருணத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர். கர்த்தாவே, நீர் இந்த மகத்தான சிலாக்கியத்தை வழங்கினதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோம், வியாதியஸ்தர்களை சுகமாக்குவதற்கு நீர் இங்கு இருக்கிறீர் என்பதை அறிந்திருக்கிறோம். 41. தேவனே, நாங்கள் அறிந்தமட்டில், நோய்களிலேயே மிகவும் கொடிதானது பாவநோயைக் கொண்டிருக்கிற மனிதனும் ஸ்திரியுமாவார்கள். பரலோக பிதாவே, இந்நாளில், இழந்து போனவர்களை இரட்சிப்பதற்காக, விசேஷித்த விதமான ஒரு சிறந்த அபிஷேகம் செய்வீராக என்று நான் ஜெபிக்கிறேன், இழந்து போன ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு ஸ்திரியும்; இரட்சிக்கப்படத்தக்கதாக கிருபையின் சிங்காசனத்தண்டை அவர்கள் இனிமையோடு வரு வார்களாக, இவைகளைக் கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம், ஆமென். 42. இப்போது, நாம் வார்த்தைக்குள் செல்லும் போது, வாசிக்கப்படும் வேத வார்த்தைக்கு கர்த்தர் ஆசீர்வாதங்களை கூட்டித் தருவாராக. நான் எப்பொழுதும் வார்த்தையை விசுவாசிக்கிற ஒரு பெரிய விசுவாசியாக இருந்து வருகிறேன். ஏனென்றால் இங்கே, சில இரவுகளுக்கு முன்னால் நான் எங்கோ ஒரிடத்தில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்தேன்- அது தீர்க்கதரிசனம் உரைக்கும்படியாக சென்ற தீர்க்க தரிசிகளைக் குறித்து இருந்தது. ஆனால் மிகாயா... நானூறு தீர்க்கதரிசிகளும் இசைவாய் தீர்க்கமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்தபிறகு, இருப்பினும் யோசபாத், "இங்கு வேறு யாராகிலும் இல்லையா?" என்று கேட்டான். நானூறு தீர்க்கதரிசிகளும் வார்த்தையைக் கொடுத்த பிறகு வேறு ஒருவர் இல்லையா? ஆனால் மிகாயாவோ வார்த்தையில் தரித்திருந்தான். ஏதோ ஒன்று தவறாக உள்ளது என்பதை அவன் அறிந்திருந்தான். 43. தேவனுடைய வார்த்தைக்குப் புறம்பாக ஏதாவது ஒன்றை நாம் கேள்விப்படும்போது, அங்கு ஏதோ தவறு இருக்கிறது என்பதை நாம் அறிகிறோம், அது வேதத்திற்கு ஒத்ததாக இல்லை. இயேசு, "என்னுடைய ஆடுகள் என்னுடைய சத்தத்தை அறியும், அவைகள் ஒரு அந்நியன் பின்னால் செல்லாது" என்று கூறினார். 44. ஏஞ்சலஸ் தேவாலயத்தில் [Angelus Temple) நடக்கப்போகும் எழுப்புதலுக்காக ஜெபிக்கிற உங்களுக்கு நன்றி. அங்கே முதல்நாள் சாயங்காலத்தில்... அது ஐயாயிரத்து ஐநூறு பேர் அமரும் அளவே உள்ளது, ஐயாயிரத்து ஐநூறு பேர் மட்டுமே, அவர்கள் ஆறாயிரம் பேர் உள்ளே வர அனுமதித்து விட்டனர், விதிமுறைகளைக் கடைப்பிடிக்க பொறுப்புள்ள அதிகாரி (Fire Marshall] நான் அங்கு ஏஞ்சலஸ் தேவாலயத்திற்கு சென்றடைவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன் கதவுகளை எல்லாம் மூடி விட்டார். நம்முடைய அன்பான கர்த்தராகிய இயேசு எவ்வாறு இழந்து போனவர்களை இரட்சித்தார், எவ்வாறு வியாதியஸ்தரை சுகமாக்கினார். அது மிகவும் அதிசயமானது. அதற்கு அடுத்த நாள்... 45. மேலும் நம்முடைய இளைய சகோதரி ஹிக்ஸ் [Hicus] அவர்கள், இங்கு ஞாயிறு பள்ளி நடத்துகிறவர்கள், அவர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் அவர்களின் கணவரையும் சந்தித்தேன், மற்றும் நான் சகோதரன் பென் பிரயன்ட் (Ben Bryant) மற்றும் இந்தக் கூடாரத்தில் இருந்து மேற்குக்குச் சென்று அங்கே ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொண்ட அநேகரைச் சந்தித்தேன். மறுபடியும் ஒரு ஐக்கியத்தில் எல்லோரையும் மறுபடியும் சேர்ந்திருப்பது என்னே! ஒரு அதிசயமான காரியமாயிருக்கிறது. 46. இந்த காலை வேளையில் வாசிப்பதற்குகென்று, பரிசுத்த மத்தேயு எழுதின சுவிசேஷம் 17ம் அதிகாரத்தில் இருந்து செய்திக்காக ஒரு பாகத்தை நான் வாசிக்க விரும்புகிறேன். கர்த்தர் தாமே அந்த வார்த்தையில் நமக்கு ஒரு செய்தியின் கட்டமைப்பைத் தருவாராக. ...ஆறு நாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின் மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்: அவர் முகம் சூரியனைப் போல பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல வெண்மையாயிற்று. அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். அப்பொழுது பேதுரு, இயேசுவை நோக்கி, ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். அவன் பேசுகையில், இதோ ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. 47. கர்த்தர் தாமே வாசிக்கப்பட்ட வார்த்தைகளுடன் அவருடைய ஆசீர்வாதத்தையும் கூடத் தருவாராக. 48. சில நேரங்களில் தேவன் மனிதனின் வித்தியாசமான ஆலோசனைகளைச் சந்திக்கிறார். எப்பொழுதும் தேவன் மனிதனுக்கு ஆலோசனை சொல்வதையே விரும்புகிறார். பழைய ஏற்பாட்டில் அநேக நேரங்களில், தேவன் எவ்வாறு மனிதனைச் சந்திக்கிறார் என்பதை கண்டுகொள்ள நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அவர்கள் எண்ணிக் கையுள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்பதையும் பொருட்படுத்தாமல், தேவன் ஒரு மனிதனையே சந்திக்கிறார். ஒரு சமயம் அவர் ஐநூறு பேரை சந்தித்தார், மறுபடியும் அவர் எழுபது பேரை சந்தித்தார், மறுபடியும் அவர் பன்னிரண்டு பேரை சந்தித்தார். ஒரு சமயம் அவர் மூன்று பேரை சந்தித்தார்,அதன் பின்பு மறுபடியும் ஒரு மனிதனை மட்டுமே சந்தித்தார். கூட்டத்தின் எண்ணிக்கையைத் தவிர்த்து, தேவன் எப்பொழுதும் ஒரு மனிதனை மட்டுமே சந்திப்பதை நேசிக்கிறார். 49. ஆகவே, அப்படி இருந்தும் கூட சபையானது இன்று இந்த காலை வேளையில் அதிகமான அங்கத்தினர்களோ அல்லது அளவில் பெரியதாகவோ அல்லது பல பெரிய தேவாலயங்களைப் போல இல்லாம லிருந்தும் கூட, ஆனால் தேவன் நம்மைச் சந்திக்கப் பிரியப்படுவார். ஏனென்றால் அவர், "என்னுடைய நாமத்தில் எங்கே இரண்டு பேரோ அல்லது மூன்று பேரோ கூடி இருக்கிறார்களோ அங்கே அவர்கள் மத்தியில் நான் இருக்கிறேன். என்னுடைய நாமத்தில் இரண்டு அல்லது மூன்று பேர் கூடி வந்தால், அந்த இரண்டு மூன்று பேர் மத்தியில் நான் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார். 50. பரிசுத்த ஆவியினால் நாம் இன்று இங்கே அதை காட்சிப்படுத்தக் கூடும், அந்தப் பாடத்தில் நாம் மணிக்கணக்காக தோண்டி எடுக்கலாம். ஆம், ஒரு வாரம் கூட ஆகும் என்று நான் கூறுவேன். அது பல ஆண்டு காலமாகத் தோண்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, இன்னும் அதில் பாதியைக் கூட நம்மால் அந்த அதிசயமான பாடத்தை வெளிப்படுத்த முடியவில்லை, மேலும் ஒருவேளை ஒருபோதும் முடியாமல் போய்விடும். 51. ஏனென்றால், தேவனுடைய வார்த்தை மனிதனுடைய வார்த்தையைப் போல் அல்ல. ஒரு மனிதனுடைய வார்த்தை ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உடையதாகவும், அந்த நேரத்திற்கென்று கொடுக்கப் பட்ட வார்த்தை என்பதை உணர்த்துவதாகவும் இருக்கும். ஆனால், தேவனுடைய வார்த்தையோ நித்தியமான அழியாத அர்த்தத்தை உடையதாக காலங்கள் தோறும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சந்ததியாரும் அதே வார்த்தையை எடுத்துக் கொள்ளலாம், ஏனென்றால் அது தேவ ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டது, நித்தியமானது, ஒருபோதும் அழியாதது, தேவனிடமிருந்து வந்த மங்கிப் போகாத பிரகடனமாக இருக்கிறது. அது என்னவாக இருந் தாலும், அப்போஸ்தலர்கள் அவர்களுடைய காலத்தில் அதை வாசித்தார்கள் என்றால், அது அவர்களுக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்தது. வெஸ்லி அவருடைய காலத்தில் அதை வாசித்தார் என்றால், லூத்தர் அவருடைய காலத்தில் அதை வாசித்தார் என்றால், கால்வின் அவருடைய காலத்தில் அதை வாசித்தார் என்றால், அவ்வாறே அது இன்னும் ஒளி மிகுந்து மின்னுகிற, பிரகாசமுடைய, அது பேசப்பட்ட நாளில் இருந்த அதே வல்லமையுடனும், அதே தாக்கத்துடனும் இன்றும் இருக்கிறது. ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தை. 52. நம்முடைய வார்த்தை எப்படியிருக்கும், "ஜான் நீ என்னுடைய வீட்டிற்கு வா, உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவேன்". இது நம்முடைய வார்த்தைகள். அது, "ஜான் எங்களுடைய வீட்டிற்கு வா" என்ற பொருளை மட்டுமே கொடுக்கும். 53. ஆனால் தேவன் பேசும்போது, அது நித்திய மானது ஆகும். அவரிடமிருந்து வந்த சுவாசக் காற்றால் ஊதப்பட்ட ஒன்றாகும். அவர் தாமே என்றென்றும் சிருஷ்டிக்கிறவராயிருக்கிறார். ஆகவே அதனால், தேவனுடைய எந்த வார்த்தையிலும் முழு அர்த்தத்தை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. அது ஒவ்வொரு காலத்திற்கும், ஒவ்வொரு சந்ததியாருக்குமானது. 54. இப்போது, இந்த இடத்தில்... இந்தக் காலை வேளையில் நமக்கு முன்னால் நாம் பெற்றுக் கொண்டது என்னவெனில் தேவன் மூன்று தனி நபர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். 55. இப்போது, முதலாவதாக மூன்று என்ற எண் தெரிந்து கொள்ளப்பட்ட பரிபூரணமான எண்ணாகும். தேவன் மூன்றை தெரிந்துகொண்டார். அது தேவனுடைய பரிபூரணமான எண்ணாக இருக்கிறது. ஏழு என்பது அவருடைய ஆராதனைக்குரிய எண்ணாகும். ஐம்பது என்ற எண் ஜூபிலியைக் (விடுதலை பெருவிழா] குறிக்கும், நாற்பது அவருடைய சோதனையின் எண்ணாக இருக்கிறது. மூன்று என்ற எண் அவருடைய எண்ணாகும், இந்த நாளில் கடந்து செல்வதற்குத் தெரிந்து கொண்ட எண்ணாகும். 56. இப்போது, மூன்று என்ற எண், பரிபூரணத்தைக் குறிக்கும் எண்ணாகும், அது என்ன வென்றால் தேவன் அதில் பரிபூரணமடைகிறார், ஒன்றான மெய்த் தேவனாகிய நித்திய தேவன், அவருடைய தேவத்துவ வெளிப்பாட்டில், மூன்று என்ற எண்ணில் பரிபூரணம் அடைகிறார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர். அது மூன்று வித்தியாசமான தனித் தனித் தேவர்கள் என்று அர்த்தம் அல்ல, ஆனால் ஒரே ஒரு தேவன் தான் உண்டு, மூன்றில் பிரதிபலிக்கிறார். தேவன் மூவராய் இருக்கவில்லை; தேவன் ஒருவரே. ஆனால் அவருடைய தேவத்துவத்தை மூன்றில் வெளிப் படுத்துகிறார், அதன் பொருள் என்னவெனில் பூமியில் மூன்று யுகங்களின் காலத்தில் ஜீவனுள்ள ஒன்றான மெய்த்தேவன் பரிபூரணப்படுகிறார். 57. அவர் எரிகிற முட்செடியில் ஆபிரகாமுக்குத் [மோசே என்பதற்குப் பதிலாக தீர்க்கதரிசி ஆபிரகாம் என்று கூறுகிறார் -ஆசி] தரிசனமானார். பிதாவாகிய தேவன் என்னும் நாமத்தில் இஸ்ரவேல் புத்திரரை வழி நடத்தினார், அது ஒரு ஒளியாக இருந்து ஆசரிப்புக் கூடாரத்திற்கு மேலாகத் தொங்கியது, அந்த ஒளியே அவர்களின் பயணத்தில் அவர்களை வழிநடத்தி சென்றது, அது தேவனாகிய பிதாவாகும்.அதன் பின்னர், பிதாவானவர் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள பிளவை நீக்கி ஒப்புரவாகும் பொருட்டு... 58. சிறிது காலத்திற்கு முன்பு நான் இங்கு பேசிக் கொண்டிருந்தபோது, நான், "ஆட்டுக்குட்டியும் புறாவும்" என்ற தலைப்பில் கூடாரத்தில் கடைசியாக கொடுத்தது என்று விசுவாசிக்கிறேன், அது தேவன் மாத்திரமே என்று கூறும்படியாய் இருந்தது... வேறு யாராலும் அதை செய்ய முடியாது. தேவன் பூமிக்கு வர வேண்டும், மேலும் அந்த வேலையை அவரே செய்ய வேண்டும். மேலும் அவர் தம்முடைய குமாரனை ஒரு ஆட்டுக்குட்டியின் ரூபத்தில் பிரதிபலித்தபோது, சிருஷ்டிப்புகளிலேயே மிகவும் சாந்தமான ஒன்று, ஒரு புறாவின் ரூபத்தில் தம்மைத் தாமே பிரதிபலித்தார், வானங்களில் பறக்கும் பறவைகளிலேயே மிகவும் சாந்தமானது... மேலும் அவர் அதை அவ்வாறு செய்ததற்குக் காரணம் என்னவெனில், சாந்தம் சாந்தத்துடன் வாசம் செய்யும் என்பதைக் காட்டுவதற்காகவே தாழ்மை தாழ்மையுடன் வாசம் செய்யும். அது ஒத்துப் போக வேண்டும். 59. ஒரு தச்சனோ அல்லது ஒரு தனி அறையை உருவாக்குகிறவனோ ஒத்துபோதல், பொருந்துதல் என்றால் என்ன என்பதின் அர்த்தம் அவர்களுக்குத் தெரியும், "நாம் அதை இவ்வாறு அழைப்போம், ஒரு பலகையை இன்னொரு பலகையுடன் சரியாக பொருத்தும் படி செய்யப்படும் வளைவுகள், அது பலகைகளை சரியாக பொருத்தி முழுமை பெறச் செய்யும், அதை செய்வதற்கு நாக்கு மற்றும் வளைவுகள்... ஒரு பலகையின் விளிம்பில் பள்ளம் எடுக்கவேண்டும், இன்னொரு, பலகையில் நாக்கு போன்று ஒன்றை உருவாக்கி இந்தப் பள்ளத்தில் சொருக வேண்டும். அவைகள் ஒன்றுடன் ஒன்று இணையும் போது, அது மிகவும் இறுக்கமாக இணைக்கப்பட்டு விடும். அது தண்ணீரில் பட்டால் காற்றுக்கூட புகாத அளவுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும். 60. தேவனும் விசுவாசியும் இணையும் போது... தேவன் மிகவும் பரிபூரணமாக அந்த வெட்டப்பட்ட பள்ளத்தில் பொருத்திக் கொண்டு, அந்த விசுவாசியை உருவாக்குகிறார், அவர்கள் இருவரும் ஒன்றாய் இணையும் போது... பேதுரு, "மனந்திரும்பி பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள்" என்று கூறினார். பாருங்கள்? அது அவர்களை முழுமை பெறச் செய்கிறது! 61. பின் தேவன் புறாவின் ரூபத்தில் இறங்கி வந்து ஆட்டுக்குட்டியின் மேல் அமர்ந்துவிடுகிறார், ஆட்டுக் குட்டிக்குள் வாசம் செய்கிறார், ஆட்டுக்குட்டியை விட்டு அவர் ஒருபோதும் வெளியே செல்வதில்லை, ஏனென்றால் அவர்கள் இருவரும் ஒன்றாகிவிடுகின்றனர், அது உலகம் ஒருபோதும் பெற்றிராத ஒரு மகத்தான நிகழ்வாகும். அந்தப் பொருளின் பேரில் நாம் சற்றுநேரம் கவனிப்போம். அவை என்னுடைய பாடப் பொருளுக்கு அப்பாற்பட்டது. ஆனால் எவ்வாறு பரலோகமும் பூமியும் ஒன்றையொன்று தழுவிக் கொண்டன, எவ்வாறு தேவனும் மனிதனும் ஒன்றாய் இணைந்து ஒப்புரவாகினர் என்பதை காட்டுகிறது. எவ்வாறு ஆகாயத்தில் பறக்கிற சிருஷ்டிகளும், பூமியின் வெளிகளில் நடமாடுகிற மிருகங்களும் ஒன்றாய் இணைந்தன என்பதும் மனிதனும் தேவனும் ஒன்றாய் இணைந்த போது அப்படியாயிற்று, அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் மனிதரால் உண்டானது, என்ன ஒரு ஆச்சரியமான காரியம். 62. தேவனோடு தரித்திருக்க வேண்டுமானால், மென்மையாக இருக்க வேண்டும். தேவன் மென்மை யாக இருக்கிறார். தேவனோடு தரித்திருக்க வேண்டு மானால், அன்புடையவர்களாய் இருங்கள். தேவன் அன்பாயிருக்கிறார், சாந்தமாய் இருங்கள்; ஒருபோதும் தன்னலமிக்கவராய் வாழாதீர்கள். எப்பொழுதும் அவரைச் சார்ந்திருங்கள். உங்கள் சொந்த சிந்தையைப் பயன்படுத்தாதீர்கள். அவருடைய எண்ணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவருடைய எண்ணங்களே (சிந்தையே) உங்களுடைய எண்ணங்களாக [சிந்தையாக) இருக்கட்டும். உங்களின் மாமிச சிந்தையை அகற்றுங்கள், "ஓ, தேவனே, என்னுடைய எல்லா சந்தேகங்களையும் என்னைவிட்டு எடுத்துப் போடும், என்னுடைய எண்ணங்கள் எல்லாம் உம்மு டைய எண்ணங்களைப் போல இருக்கட்டும்" என்று இதை திரும்பத் திரும்பக் கூறுங்கள். வியாதியஸ்தராய் இருக்கிற நீங்களும், நாங்கள் பேசுவது போல் செய்யுங்கள். சற்றே அதை எடுத்துப் போடுங்கள், வியாதியா யிருக்கிறோம் என்ற எண்ணத்தையே தூற எறிந்து போடுங்கள். தேவனுடைய சுகமாக்கும் எண்ணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய எண்ணங்களாக மாறட்டும். 63. வேதத்தில் சொல்லியிருக்கிறபடி, புகழ் எதுவோ புண்ணியம் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள். 64. அந்த மூவரிடத்தில், தேவன் பேசிக்கொண்டிருக் கிறார். இப்போது, மூன்று என்பது ஒரு உறுதிப்பாடாக இருக்கிறது. பேதுருவை அவருடன் கூட்டிச் சென்றார்; அது விசுவாசம், யாக்கோபு; நம்பிக்கை, யோவான்; அன்பு. விசுவாசம் நம்பிக்கை மற்றும் அன்பு, இந்த மூன்றும்..... நீங்கள் விசுவாசம் நம்பிக்கை அன்பு ஆகியவற்றை உடையவர்களாய் இருந்தால், பரலோக இராஜ்யத்திற்கு மிக அருகாமையில் இருக்கிறீர்கள். பின்பு மூன்று மகத்தான காரியங்கள், தேவன் அவைகளை ஒரு உறுதிப்பாட்டிற்காகக் கூட்டிச் சென்றார். ஏனென்றால், சகல காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும். 65. பின்பு மறுபடியும் அது ஒரு குமாரனைத் தன் ஸ்தானத்தில் வைப்பதை பிரதிபலிக்கிறது. பழைய ஏற்பாட்டில் ஒரு குடும்பத்தில் ஒரு குமாரன் பிறக்கும் போது, அவனுக்கு கற்றுக் கொடுக்கவும் மற்றும் அவனை கவனித்துக் கொள்ளவும் பயிற்சி அளிக்கவும், ஒரு உபாத்தியாயர் அவனுக்கு கொடுக்கப்படுவார். அவனுடைய தந்தையோ அவனுடைய இராஜ்ஜியத்தில் எப்பொழுதும் அலுவலாக இருப்பார். ஒவ்வொரு சிறிய இராஜ்ஜியமும் ஒரு வீடு என்று அழைக்கப்பட்டது. 66. ஜேம்ஸ் அரசனின் [King James] மொழிப்பெயர்ப்பில் அவ்வாறு தான் இருக்கிறது. யோவான் 14ல், "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு" என்று கூறப்பட்டுள்ளது. ஒரு வாசஸ்தலம் அல்லது ஒரு வீடு என்பது அது வித்தியாசமானப் பொருளைத் தருவதாக உள்ளது. இப்போது, மேற்கத்திய ஜனங்களாகிய நமக்கு அது சரியான பொருளைக் கொடுக்கவில்லை, ஆனால் பரிசுத்த வேதாகமம் எழுதப்பட்ட காலத்தில் ஒரு ஸ்தலம் என்பது வீட்டிற்குள் இருக்கும் ஒரு பாகம். வீடு என்றால் இராஜ்ஜியம் என்று பொருள். 67. மேலும் இந்த தந்தையானவர் அவருடைய பண்ணையில் அநேக வாடகைதாரர்களைக் கொண்டிருந்தார், எங்கு பார்த்தாலும் அவர்கள் டஜன் கணக்கில் இருந்தார்கள் (டஜன் என்பது பன்னிரண்டு எண்ணிக்கையுள்ள அளவைக் கொண்டது]. மேலும் ஒரு குமாரன் பிறந்த போது, அவன், "தேர்ந்தெடுக்கப் பட்ட, கல்வி பயின்ற, மிகவும் தாழ்மையான, தனக்கு நெருங்கிய, தன்னுடைய இராஜ்யத்தில் ஒரு பாகமாக இருக்கிற ஒரு உபாத்தியாயரை உடையவனாய் இருக்கிறான். தந்தை எனப்படுபவர், அப்படிப்பட்ட தகுதியுடைய ஒருவரிடத்தில் தான் தன் குமாரனை ஒப்புக் கொடுப்பார். 68. இன்று பிதாவானவர் எவ்வாறு தன்னுடைய குமாரர்களாகிய உங்கள் மீதும் என் மீதும் ஒரு சரியான உபாத்தியாயரை வைக்கிறார். அது என்ன, நீங்களும் நானும் தான். ஒருவரை தெரிந்து கொண்டார், அவர் வேறு யாரும் இல்லை, அது கர்த்தராகிய இயேசுவின் சொந்த இருதயமும் மற்றும் ஆத்துமாவுமாகும், தேவனே வியந்து பாராட்டும் அளவிற்கு நம்மை வளர்க்கிறார். 69. இந்த உபாத்தியாயர் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்! அவர் ஒரு சிறந்த புத்திசாலி மனிதனாக இருக்க வேண்டும், தேர்வு செய்யப்பட்ட மனிதனாக இருக்க வேண்டும். பிதாவால் நேசிக்கப்படுகிற ஒருவராய் இருத்தல் வேண்டும், அப்படிப்பட்ட ஒருவர் தான் குழந்தைக்கு சரியான கொள்கைகளை போதிப்பார். 70. இன்று பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு, அவர் வரும் போது, மற்ற எல்லாக் காரியமும் இரண்டா வதாகக் காணப்படும், பரிசுத்த ஆவியானவர் வரும் போது அவ்வாறு இருக்கும். அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டது என்று ஜனங்கள் சொல்லக் கூடும், ஆனால் மறுபடியும் பிறந்த ஒரு மனிதன் ஒரு முறை அதற்கு முன்னால் வரட்டும், ஏனென்றால் அவர் ஒருவரே எது உண்மை என்பதை போதிக்கிறவராய் இருக்கிறார். அவர் ஒருவரே பிதாவைக் குறித்து பேசுகிறவராயிருக்கிறார். 71. அதற்குப் பதிலாக என்னுடைய குழந்தைக்குக் கற்பிப்பதற்காக அ, ஆ, இ என்ற முதல் எழுத்து கூட தெரியாத ஒரு மனிதனைக் கொண்டிருப்பேனே யானால், பரிசுத்த ஆவியைப் பெற்றிராத உலகத்தில் உள்ள மற்ற எல்லா பேராசிரியர்களைக் காட்டிலும், பரிசுத்த ஆவியைப் பெற்றவர் பிதாவை குறித்துப் பேசுபவராக இருப்பார். பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர் பிதாவை குறித்து பேசுகிறார். அப்படியானால் அது குழந்தையானது பலவிதமான கொள்கை களையுடைய காற்றுக்களால் அலைக்கழியாமல் இருக்கும்படி கற்றுக் கொடுக்கும். ஆனால் பிதா வைத்துள்ள கொள்கைகளை ஏற்று அதை விசுவாசிக்கச் செய்யும். 72. அதன் காரணமாக, தெய்வீக சுகமளித்தல் என்பது உண்மையான விசுவாசிக்கு மிகவும் எளிமை யாக, எளிதாக இருக்கும், ஏனென்றால் எல்லாவற் றையும் விசுவாசிக்கும்படி அவன் பரிசுத்த ஆவியால் போதிக்கப்பட்டிருக்கிறான். சிருஷ்டி கர்த்தருடைய வார்த்தையை நாம் எவ்வாறு சந்தேகிக்கக் கூடும்? 73. இந்த உலகம் முதல் முதல் எவ்வாறு தோன்றியது? அதை உருவாக்குவதற்காக அதற்கான பொருட்களை அவர் எங்கிருந்து பெற்றார்? அதை எப்பொழுதாவது நிதானமாய் அமர்ந்து நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? ஒன்றுமே செய்யவில்லை, அதற்கான வார்த்தையை அவர் பேசினார். மொத்தமாக எப்படியிருந்தாலும், இப்போது இங்கிருக்கிற சிருஷ்டிப்பு யாவும், தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடேயன்றி வேறொன்றும் இல்லை. அதை நினைத்துப் பாருங்கள். தேவனுடைய வார்த்தையினால் மரங்கள் வளர்கின்றன. மலைகள் ஆகாயத்தை எட்டும் அளவு உயர்ந்துள்ளன, அதன் அழகை நாம் பார்க்க விரும்பினால், அந்த விருப்பத்தை நம்மில் உருவாக்குகிறது, மலையை அண்ணாந்து பாருங்கள், "இன்னும் இன்னும் மேலே ஏறிப்போனால் அது இன்னும் அதிகமான சுத்தமும், தெளிவுமாகக் காணப்படும். 74. வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனி மலைகள், பனிப் பாறைகள் சூழ்ந்த வெளி நிலங்களைத் தூரத்தில் நின்று பார்ப்போமேயானால், இங்கே நீங்கள் சதுப்பு நிலங்களைப் பார்ப்பது போல் இருக்கும், சற்று உயரத்தில் தண்ணீர் தெளிவாக சுத்தமாகக் காணப்படும்; அது நீல நிறமாகவும், மிகவும் சுத்தமாகவும் இருக்கும் மரங்கள் கண்ணுக்குத் தெரியாமல் மங்களாய் காணப்படும். எல்லா இயற்கையும் "மேலே நோக்கிப் பார்" என்று கூறுவது போல் இருக்கும். தூரத்தில் காணப்படும் பெரிய பனிக்கட்டிப் பாறையின் மேற்புறம் வழியாக பார்த்தால், அது மிகவும் பிரகாசமாக, சூரியன் பிரகாசிப்பது போலவே இருக்கும், மேலே நோக்கிப் பார்த்துக் கொண்டே இருங்கள். அதன் முழுமையையும் நீங்கள் உண்மையான பொருட்களை, சுத்தமானப் பொருட்களைக் காண விரும்பினால், எப்பொழுதும் மேலேயே நோக்கிப் பாருங்கள். மலைகள் அதைத் தான் சுட்டிக் காட்டுகின்றன. தாவீது, "எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். கர்த்தரிடத்தில் இருந்து எனக்கு ஒத்தாசை வரும்" என்று கூறினான். 75. உபாத்தியாயர் எப்போதும் குழந்தைக்கு அவனுடைய பிதாவைச் சுட்டிக் காண்பிப்பார், அவன் பிதாவை விசுவாசிக்கவும் நம்பவும் செய்வார். அவ்வாறு தான் உபாத்தியாயர் ஒரு பயிற்சியாளராக இருப்பார். 76. இன்று காலையில் என்னுடைய பிரியமான சிறிய கூட்டாளியைக் கவனித்துக் கொண்டிருந்தேன், நான் என்னுடைய இளைய மகனைப் பார்த்தேன், மேஜையில் அவனுடைய சிறு கோபத்தை வெளிப் படுத்தினான், அவனுடைய தாயார் அதிக விசுவாசத் தோடு அவனுடைய காலை உணவாகிய முட்டை மற்றும் தொட்டுக் கொள்ள உண்டான பொருட்களை ஆயத்தம் செய்ததை, தன்னுடைய கோபத்தில் மேஜையில் கொட்டி விட்டான். அவன் கரண்டி வைத்து சாப்பிடுவதற்கு அவள் கற்றுக் கொடுக்க முயற்சி செய்தாள். அவன் அந்த உணவைத் தவறான கையால் [இடது கை] எடுக்க விரும்பினான். 77. நல்லது, எனக்குள் நான் சொல்லிக் கொண்டது, "அவன் அந்த கையிலேயே எடுக்கட்டும்" என்று. ஆனால் தாயாரோ அதில் வித்தியாசம் இருக்கிறது என்பதை அறிந்தாள். அதே வழியில் அவனை விட்டு விட்டால் அவன் இரு கைகளையும் பயன்படுத்துகிறவனாகவோ அல்லது இடதுகைப் பழக்கமுடைய வனாகவோ ஆகி விடுவான் என்பதை அவள் அறிந்திருந்தாள். அது வழக்கமல்ல, ஆகவே, ஒரு உண்மையான பயிற்சியளிப்பவளாக, அவன் தன் கையை மாற்றும்படிக்கு செய்தாள், அவன் அதை விரும்பவில்லை என்றாலும் அப்படி செய்தாள். ஆனால் தாயானவள் எது சிறந்தது என்பதை அறிவாள். 78. மேலும் அநேக நேரங்களில் பரிசுத்த ஆவியானவர், நாம் அதைத் தவறாகச் செய்ய முயற்சிக்கும் போது, ஆனால் அது சில நேரங்களில் நம்மைக் குத்துகிறதாயிருக்கிறது. சில சமயங்களில் வேதனையோடு நாம் படுக்கையில் படுத்திருக்கலாம்; சில சமயங்களில் மருத்துவர் எல்லா நம்பிக்கையும் போய் விட்டது என்று கூறலாம்; ஆனால் நாம் வலதுகையைப் பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுப்பது பரிசுத்த ஆவியானவரே. எது சிறந்தது என்று அவர் அறிவார். அது எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்று பிதாவானவர் விரும்புகிறார் என்பதை அவர் அறிவார். அவர் பயிற்சி அளிப்பவராக இருக்கிறார். மேலும் நான் நினைத்தேன்... 79. சிறிய மகன் ஜோசப், அந்தக் கையை அவன் பயன்படுத்தக் கூடாது, ஆகவே, தாயார் ஒரு மெல்லிய பிரம்பை எடுப்பதற்காகச் சென்றாள், அது இவ்வளவு நீளமுடையதாய் இருந்தது. அவன் அதை ஒரு பக்கமாகத் தட்டினான், அவன் என்னை நோக்கிப் பார்த்தான். ஆனால், நான் அவனை என் முழு இருதயத்தோடு நேசிக்கிறேன், அவனுக்காக விலைக் கிரயமின்றி என் ஜீவனையும் கொடுப்பேன், ஆனால் தாயார் சிறந்ததை அறிந்திருந்தாள் என்பதை நான் அறிந்தவனாயிருந்தேன். நான், "அவள் குழந்தைக்குப் பயிற்சியளிக்கிறாள்" என்று கூறினேன். 80. நாம் இரக்கம் பாராட்டுதல் கூடாது, மேலும் அளவுக்கதிகமான இரக்கத்தைப் பெற வேண்டும் என்பதையும் எதிர்பார்க்கக் கூடாது. நம்முடைய பிதா குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதை நாம் கவனிக்க வேண்டும். எது சிறந்தது என்பதை அவர் அறிவார். சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் அநேகச் சமயங்களில் நாம் கூறுவோம், "ஓ, நான் என்னுடைய சபைக்குச் செல்வேன். அவர்கள் பயிற்சி... கொடுக்க மாட்டார்கள், நான் விரும்புகிற வழியில் அதை ஏற்றுக் கொள்வேன் என்று. பாருங்கள்?ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எது சிறந்தது என்று தெரியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உனக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை அவர் அறிவார். பல நேரங்களில், அது பிரம்பை வைத்து தட்டுவது போல இருக்கும், உன்னை சீர்படுத்துகிறார். தேவன் அவரை (பரிசுத்த ஆவியானவரை) - சபைக்கு பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்கும் படி அவரை வைத்துள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் பிதாவை நேசிக்கிறார், அவர் எப்பொழுதும் பிதாவையே சுட்டிக் காட்டுவார். 81. மேலும், இப்போது, அந்தக் குழந்தை பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது, அந்தப் பிள்ளை... என்று பொருள் அல்ல. அந்தப் பிள்ளை நிச்சயமாக பிதாவின் ஒரு மகனே, ஆனால் அந்தப் பிள்ளைக் கீழ்ப்படியாதவனாக இருந்தால், பயிற்சியாளனுக்கு எப்போதும் அந்தப் பிள்ளையுடன் தொல்லைதான், எப்போதும் அது உள்ளும் புறம்புமாக, மேலும் கீழுமாக, நல்லது, அப்படியானால், இந்த செய்தி யானது பிதாவினிடத்தில் கொண்டு போகப்படும், பிதாவுக்கு வேண்டியதெல்லாம், "என்னுடைய பிள்ளையின் முன்னேற்றம் எவ்வாறு இருக்கிறது? " என்பது தான். 82. அப்படியானால் அவர் சொல்ல வேண்டியது, "அது செய்வதெல்லாம் அவ்வளவாக எதுவும் நன்றாக இல்லை" என்பதாக இருக்கும். நல்லது, அப்படி யானால், உண்மையாகவே, பிதாவின் இருதயத்தைத் துக்கப்படுத்துவதாக இருக்கும். 83. இந்நாளுக்குரியதும் அதுதான், பரிசுத்த ஆவியானவர் தேவனுக்கு முன்பாக நம்மைக் குறித்த பதிவுகளை கொண்டு போகும் போது அவ்வாறே இருக்கும். நாம் தேவனுடைய பிள்ளைகளாகும் போது, நமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளுக்கு (கட்டளைகள்) எல்லாவற்றிலும் தகுதியுடையவர்களாய் நாம் நடக்க வேண்டும், அதற்காக பரிசுத்த ஆவியானவர் நமக்குப் பிள்ளைகளுக்குரிய பயிற்சியை அளிக்கிறார். எப்பொழுதாவது நீங்கள்... 84. நான் ஒரு பையனாய் இருந்தபோது, என்னுடைய தகப்பனார் சற்று வித்தியாசமானவராக இருந்தார், இன்று காணப்படும் சில நவீன காலத்து தகப்பனார்களைப் போல, என்னுடைய தகப்பனார் கசையடி கொடுப்பதில் நம்பிக்கை உள்ளவராக இருந்தார். அவர் அவர்களை உண்மையாகவே அப்படிச் செய்தார். அவைகளை நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். நான் இன்னுமாக நாற்பத்தியேழு வயதுடையவனாக இருக்கிறேன், அவைகளை நான் நினைவு கூறுகிறேன். ஆனால் அது எனக்கு நன்மை பயத்தது. அது என்னைப் பயிற்றுவித்தது. இன்றைக்கு நான் கல்லறைக்குச் செல்ல கூடுமானால் அவரை எழுப்பி, முதலாவது நான் அவருடைய கரங்களைப் பிடித்து குலுக்குவேன் அவர் செய்தவற்றிற்காக நான் அவரை கட்டித் தழுவுவேன். 85. பூமிக்குரிய என்னுடைய தகப்பனாரைக் குறித்து அவ்வாறு நான் உணர்ந்தால், நாம் அவருடைய பிரசன்னத்தில் நிற்கும் போது அந்தநாள் எவ்வளவு உணர்ச்சியுள்ளதாய் இருக்கும். மேலும் நமக்கு நடந்த காரியங்களை நாம் பார்க்கும் போது, எல்லாமும் நமக்கு நன்மைக்கேதுவாய் நடந்தது. அங்கே சிறிதளவில் நம்மை நறுக்கிக் குலுக்கினார், அவ்வாறு பிள்ளைகளுக்குரிய பயிற்சியை நமக்கு அளித்தார், உலகத்தின் காரியங்களை எடுத்துப் போட்டார், ஆகவே நாம் அவருக்கு முன்பாக தாழ்மையுள்ள பிள்ளைகளாக நடப்போமாக. தொடக்கத்தில் கடினமாகக் காணப்படும், ஆனால் அவர் என்ன செய்கிறார் என்பதை தேவன் அறிவார். நிச்சயமாக, அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியும். 86. மேலும் அவர், பின்பு, பரிசுத்த ஆவியானவர் செய்தியைக் கொண்டு வரத் தொடங்கும் போது, அப்போது, பிள்ளையானவன் முதிர்ச்சியடைந்தவனாய் இருக்கையில் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் இருப்பானேயானால், முதிர்ச்சியின் வயதில், அப்படியிருந்தும் அந்தப் பிள்ளை ஒரு குமாரனாகவே இருக்கிறான், குமாரன் குமாரன் தான், நிச்சயமாக, ஆனால் அது ஏதோ ஒன்றை இழக்கச் செய்கிறது. 87. இங்கே ஒரு குறிப்பு இருக்கிறது, நான் காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்ல விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் தாமே அதை விசுவாசிகளாகிய உங்களின் ஒவ்வொருவருடைய இருதயத்திற்கும் எடுத்துச் செல்வராக. அது ஏனென்றால் நீங்கள் ஒரு விசுவாசியாய் இருக்கிறீர்கள்... நிச்சயமாக நீங்கள் நித்திய ஜீவனை பெற்றுள்ளீர்கள். தேவன் அவ்வாறு கூறியுள்ளார். ஆனால் யோபு கூறிய அந்த வார்த்தையை "என் பற்களை மூட கொஞ்சம் தோல் மாத்திரம் தப்பினது" நீங்கள் அதை அடைய விரும்பி னால், பிதாவிற்கு முன்பாக நீங்கள் வர விரும்பினால், அவர் உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்த தாலந்து, அது அலட்சியம் செய்யப்படும் போது, நீங்கள் அதை பயன்படுத்தவில்லை, அல்லது ஏதோ ஒன்று மற்ற ஒருவரை உங்கள் வழியில் நிற்க இடம் கொடுக்கிறீர்களா? நீங்கள் அதை மிகச் சிறிய காரியமாக, அது ஒன்றுமேயில்லை என்று எடுத்துக் கொள்வீர்களானால், எல்லாவிதமான சண்டைகள், கேலி செய்வது, தர்க்கம் செய்வது மற்றும் சபையில் கருத்து வேறுபாடு ஏற்படும் போது, உங்களிடத்திலிருந்து தாழ்மையையும், இனிய தன்மையையும் எடுத்துப் போட்டு விடும். அவ்விதமாக பிதாவிற்கு முன்பாக நிற்க நீங்கள் விரும்புகிறீர்களா? அவ்வாறு நீங்கள் நிற்பீர்கள் என்று நான் நம்பவில்லை. நீங்களோ அல்லது நானோ அவ்வாறு அதைச் செய்வோம் என்று நான் விசுவாசிக்கவில்லை. 88. அவர் எப்படி சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றால், "நல்லது". "பற்களை மூட கொஞ்சம் தோல் மாத்திரம் தப்பினது" என்றல்ல, "நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக் காரனே, நீ என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாய் செய்தாய், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பாயாக". 89. நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருக்கலாம், நீங்கள் அவ்வாறு இருப்பின், உங்களுடைய பிள்ளைகளுக்கு உங்களைத் தேவன் ஒரு போதகராக [ஆசிரியராக] செய்திருக்கிறார். அதிலிருந்து ஒரு நல்ல பணியைச் செய்யுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டும் அல்லாமல், அதை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். 90. கவனியுங்கள், பிதாவானவர் அவர் இராஜ்ஜியத்தில் கொண்டுள்ள எல்லாக்காரியங் களிலும், அந்தப் பிள்ளைத் தகுதியுடையவனாக நிரூபிக்கப்பட்டால், ஒரு உண்மையான, நம்பிக்கை உள்ள புத்திரனாக இருக்கும் போது, பின்னர் ஆசிரியர், "ஓ, உங்களுடைய புத்திரன்..." என்ற செய்தியை பிதாவினிடத்தில் கொண்டு செல்வார். 91. ஓ, இப்போது, உங்களுக்கும், எனக்கும் அப்படிப்பட்டச் செய்தியை தான் அவர் நமக்குத் தரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். "ஓ, உங்கள் புத்திரன், அவனுடைய முழுமையான எண்ணம் அனைத்தும் உம்மையே சார்ந்திருக்கிறது, அவன் எடுக்கும் எல்லா முயற்சியும் உம்மைப் பிரிதிபடுத்து வதாகவே இருக்கிறது. அவனைப் பிடித்துக் கீழே தள்ளும் அளவிற்கு அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், உம்முடைய அலுவல்களில் அவன் மிகவும் வாஞ்சையுடையவனாய் இருக்கிறான்". 92. பிதாவின் இராஜ்ஜியத்திற்கடுத்தவைகளில் கொஞ்சம் கூட வைராக்கியம் இல்லாதவனாக இருப்பதைக் காட்டிலும், நான் சிறிதளவாகினும் அதில் வைராக்கியமுடையவனாக இருக்கவேண்டும். அதில் அதிகப்படியான பணியைச் செய்ய முடியும். சில காலங்களுக்கு முன் கிறிஸ்தவ சபையின் பிரசங்கியார் என்னிடம் கூறினது போல, "திரு.பிரன்ஹாம் நான் துருப்பிடிக்காமல் இருப்பதை விட தேய்ந்துவிடுவேன்." என்று. அதில் எவ்வளவோ உண்மை அடங்கியிருக் கிறது. நான் தேய்ந்து போவதை விட இதயத் துடிப்பு நின்று மரிப்பது நல்லது. சகோதரன் நெவில் சொல்வது போல, வேண்டாம் என்று சொல்வதை விட கடிவாளத்தை ஏற்றுக் கொள்ளலாம். முயற்சி செய்வதைத் தவிர்ப்பதை விட, அதைக் காட்டிலும் மோசமான ஒன்றை உங்களால் செய்ய முடியாது. அதனுடன் நம்மால் என்ன செய்ய வேண்டுமோ, நம்மால் முடிந்த அளவு எல்லாவற்றையும் செய்வோமாக. பரிசுத்த ஆவியானவர், நம்முடைய பயிற்சியாளர், அதை பிதாவினிடத்தில் கொண்டு செல்வார். 93. மேலும் இப்போது, கவனியுங்கள், அந்தப் பிள்ளை துணிச்சல் உள்ளவனாகிவிட்டால், பின்பு அது பிதாவினிடத்தில் சொல்லப்படும், மேலும் அதில்... ஓ, அந்தச் சொல்லை நான் மிகவும் நேசிக்கிறேன். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் புத்திரனை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைக்கிறார், அவனுடைய மகிமை மற்றும் மரியாதை, எல்லாமும் பொது ஜனங்களுக்கு முன்னால் வெளிப்படுத்தப்படும். பிதாவானவர் தன்னுடைய சொந்த புத்திரனுக்கு ஒரு விழா எடுத்து கொண்டார், அவனை ஒரு பொது இடத்திற்கு அழைத்துச் சென்றார், அதன் பின்னர் அவன்-அவருடைய சொந்தக் குமாரனாயிருக்கிறான், மேலும் பிதா கொண்டுள்ள அனைத்தையும் சுதந்தரிக்கத்தக்கதாக அந்த புத்திரனை அவருடைய ஸ்தானத்தில் வைக்கிறார். அதைப் பார்த்தீர்களா? 94. இப்போது, நாம் நன்றாக நடந்துகொள்வோம் என்றால், ஒரு மகிமையான நாளில், எல்லாப் பொருள் களுக்கும், காரியங்களுக்கும் நாம் வாரிசு ஆகிவிடுவோம். தேவன் அவர் குறித்த நாளில் எல்லா மனிதர்களையும் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நியாயந் தீர்ப்பார், அந்த நேரம் வரும் போது, விசுவாசமுள்ளவராய் இருந்த அத்தனை பேருக்கும் அதற்குரிய பலனை தேவன் கொடுப்பார், விசுவாசம் இல்லாது இருந்தவர்களைப் புறக்கணிப்பார். 95. கர்த்தராகிய இயேசு அங்கு செல்வதற்கு முன்பாக... தேவன் அவருக்குள் இருந்ததினால், புறா ஆட்டுக்குட்டியை நடத்தி சென்றது, அவர் சுயமாய் எதையும் செய்ய வரவில்லை, அவரை அனுப்பின பிதாவின் சித்தத்தைச் செய்யவே வந்தார். அவர் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானையும் தன்னுடன் அழைத்துச் செல்லும் படி பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்பட்டார், இந்த மிக உயர்ந்த மலை உச்சிக்கு சென்றார்கள். நான் அதை நேசிக்கிறேன்! 96. மற்றும், ஒரு குறிப்பு, நான் அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதை மன்னிப்பீர்களானால், இந்தக் காலை வேளையில் இந்த கூட்டத்தாரிடம் நான் வைக்க விரும்புவது அதற்கு வேறு பொருளும் இதற்கு உண்டு, மலையை விட்டு அகன்று, கீழே இறங்கின பொழுது, அவர்களிடத்தில் அவர் கேட்ட கேள்வி, "மனுஷ குமாரனாகிய என்னை மனிதர்கள் யார் என்று சொல்லு கிறார்கள்? யார்... நான் உங்களுடனே இருக்கிறேன், உங்களுக்கு என்னை யார் என்று வெளிப்படுத்தியுள்ளேன், ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்? மனுஷகுமாரனாகிய என்னை இப்போது என்னைக் குறித்து ஜனங்கள் என்ன கூறுகிறார்கள்?" 97. அதைக் கவனியுங்கள். அது இந்த நாளுக்குரிய ஒரு அழகிய படமாக இருக்கிறது! நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு, நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட பிறகு, அப்படியானால் மனிதர்கள் உங்களைக் குறித்து என்ன சொல்கிறார்கள்? உங்களு டைய உணர்ச்சிகளையும், உங்களால் அடக்க முடியாத அளவு குதூகலம், ஆனந்தக் கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடுகிறது, உங்கள் கைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு இருக்க முடியவில்லை, அவர்கள் சீயோனைக் குறித்த பாடல்களைப் படிக்கும் போது, நீங்கள் பாவத்தை பார்க்கும் போது, நீங்கள் சமாதானமாய் இருக்க முடியாத போது, அவர்களிடத்தில் சமாதானமாகவும், அமைதியாகவும் பேசுங்கள். அதைக் குறித்து மனிதன் என்ன கூறுகிறான்? நீங்கள் படுத்தப் படுக்கையாகி, மரிக்கும் நிலையில், பரிதாபகரமான நிலையில், அவலமான நிலையிலும், ஒரு மரிக்கும் நிலையில் இருக்கும் போது மனிதன் என்ன கூறுகிறான், உங்களுடைய சுகத்திற்காக, சில தேவனுடைய பிள்ளைகளை உங்களோடு கூட சேர்ந்து ஜெபிக்கும் படி கேட்கும் போது, உங்களுடைய குறைகளை நீங்கள் அறிக்கை செய்யும் போது, அவைகளையெல்லாம் பிதாவிற்கு முன்பாக வைத்து, "பிதாவே என்னை மன்னியும் மேலும் இப்போது, நான் கிறிஸ்துவை என்னை சுகமாக்குகிறவராக ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறுங்கள், நீங்கள் சுகம் அடைந்து விட்டீர்கள்? "மனுஷகுமாரனாகிய என்னை, மனிதர்கள் யார் என்று கூறுகிறார்கள்?" 98. நான் ஒரு கூட்ட ஜனங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், உங்களில் சிலர் பல வருடங் களுக்கு முன்பாக புற்று நோயால் செத்துக் கொண்டிருந் தீர்கள் என்பதை நான் அறிவேன், கடைசி கட்டத்தில் இருந்தீர்கள். உங்களில் சிலர் உருமாறி, வடிவம் சிதைந்து, குருடராயும் இருந்தீர்கள், மேலும் தேவன் அவருடைய கிருபையினால் உங்களை சுகமாக்கினார். மேலும், நீங்கள் ஜனங்களுக்கு முன்பாக உங்களுடைய துணிச்சலான சாட்சியை கொடுப்பது போல... "நான் மனுஷகுமாரன் அவர்கள் என்னைக் குறித்து என்ன கூறுகிறார்கள்..."? 99. எவ்வளவு இருள் சூழ வேண்டுமோ அவ்வள வாய் இருள் சூழ்ந்த அந்த நாட்களைப்போல இருப்பினும் காட்சி எவ்வாறு மாறியுள்ளது! சிலர் அது பைத்தியக்காரத்தனம் என்று கூறுவார்கள். சிலர் அவரை பெயல்செபூல் என்றழைப்பார்கள். சிலர் அது மனோவசியம் என்று கூறுவார்கள். சிலர் அது உணர்ச்சியின் மேல் கட்டப்பட்டது என்கிறார்கள். 100. "ஆனால் அதைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?" 101. வழக்கமாக மாற்றி பேசுகிற, முந்தின பேதுரு, ஆனால் இந்த முறை அவன் அவ்வாறு கூறவில்லை. அவன் சொன்னான், "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று. மற்றவர்கள் என்ன கூறினார்கள் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை, நான் அறிந்தது அதுதான். நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து." 102. கவனியுங்கள். அதில் நாம் அதிக நேரம் செலவிடலாம். ஆனால் நாம் கடந்து செல்வோம். இயேசு "பாக்கியவான்..." என்றார். மனிதர்கள் சபிக்கலாம், மனிதர்கள் வேடிக்கையாக்கலாம், நீ ஒரு பரிசுத்த-உருளை என்று மனிதர்கள் கூறலாம், சூரியனுக்குக் கீழே மனிதர்கள் உங்களை எந்த பெயரையும் சொல்லி அழைக்கலாம், ஆனால் அவர் சொன்னார், "யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; உன்னுடைய தகப்பனார்.." 103. இப்போது அது இங்கே இருக்கிறது, நீங்கள் ஆயத்தமாய் இருக்கிறீர்களா? மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, நிரூபிக்க முடியாத கோட்பாடு களையுடைய [வேதாகமம்] பாடசாலையின் வழியாக நீ இதை கற்கவில்லை, மனிதனுடைய இறையியல் கோட்பாட்டால் பிரகடனப் படுத்தப்பட்டவைகளில் இருந்தும் இதை நீ கற்கவில்லை, ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதாவே இதை உனக்கு வெளிப்படுத்தினார்" என்று கூறினார். அது எங்கிருந்து வருகிறது பாருங்கள்? பரிசுத்த ஆவியானவராகிய பயிற்சியாளர் வழியாக. அவருடைய வெளிப்பாட்டின் மூலமாக வெளிப் படுத்தினார். 104. "மேலும், நான் உனக்கு சொல்கிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், சிறிய பாறை. நான் மகத்தான கன்மலையாய் இருக்கிறேன். நான் மூலைக் கல்லாயிருக்கிறேன், நீயோ, என் மீது பொருத்தப்பட்ட சிறிய பாறையாயிருக்கிறாய். கட்டிட அமைப்பாளர்கள் உன்னை தெரிந்து கொண்டார்கள். நீயாக உன்னை தெரிந்து கொள்ளவில்லை. கட்டிட அமைப்பாளர்களே உன்னை தெரிந்து கொண்டார்கள். ஒருநாள் இரவில், கல் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த உன்னை தேவனுடைய தூதர்கள் வெளியே அழைத்தார்கள். பின்னர் நீ உன்னை என்னிடம் அர்ப்பணித்தாய். நான் என்னுடைய சொந்த பாணியில் உன்னை செதுக்கினேன். நீ எவ்விதம் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ, அவ்விதமாக உன்னை உருவாக் கினேன். இழைத்தலை நடப்பித்தேன், நீ நிலைத்து நின்றாய். பின்னர், உன்னை இப்பொழுது ஒரு சிறிய கல்லாக, வேறு ஒரு கல்லோடு பொருந்தும்படியாகவும், அந்த கல்லை வழிநடத்தும்படியாகவும் வைத்தேன்; இந்தக் கல்லானது, அந்த கல்லை, அந்த கல்லை வழிநடத்துகிறது. அன்பு என்னும் சிமெண்ட் உங்களை ஒன்றாக கூட்டிச் சேர்த்து, என் நாமத்தை அறிக்கை யிடுகிற ஒவ்வொரு கல்லையும், இந்த வெளிப்பாட்டை ஏற்றுக் கொள்கிற ஒவ்வொரு கல்லையும் ஒன்றாக இணைக்கும் பொருட்டு அஸ்திபாரத்தை உண்டு பண்ணுகிறது, அந்த அஸ்திபாரம் நானே." 105. இந்தக் கல்லின் மேல், தேவனுடைய வெளிப்பாடு உறுதியாய் நிலைத்திருக்கும், மேலும் அது வெட்டுகிறதாய் இருக்கும், (வெளிப்பாட்டினால் அந்தக்கல்,) கல் என்பது வெளிப்பாடு, அந்த வெளிப்பாட்டின் மீது நான் என் சபையை கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை," பாதாளத்தின் அனைத்து வாசல்களும் அதற்கு விரோதமாக இருக்கும் என்பதையே அது காட்டுகிறது, ஆனால் ஒருபோதும் மேற்கொள்ளுவதில்லை. 106. என்னுடைய நண்பர்களே, இதைக் கூறுவதற்காக சிறிது நேரத்தை நான் எடுத்துக் கொள்கிறேன், ஜீவனுள்ள தேவனுடைய முழு சபையும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல் உறுதியாய் கட்டப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வளவு கற்றுள்ளீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, ஒரு வேளை நீ மிகவும் அழகுள்ளவனாய் இருக்கலாம், நீ பரிசுத்த வேதாகமத்தை அறிந்துள்ளாய், அது எவ்வளவு சிறந்ததாய் உள்ளது என்று எண்ணுகிறாய், நீ அறிந்துள்ளதைக் காட்டிலும், பிசாசானவன் அதிகமாக அறிவான். ஆனால் வெளிப் பாட்டின் மூலமாக மட்டுமே, உன்னுடைய ஆசிரியராகிய பரிசுத்த ஆவியின் மூலம் தேவன் அதை உனக்கு வெளிப்படுத்தினார், அது அவருடைய கிருபையினால் அவர் உன்னை இரட்சிக்கிறார். 107. இன்று காலையில் வெளிப்பாட்டின் மூலமாக அவர் தன்னை உனக்கு வெளிப்படுத்துவாரானால், அதுவே உன்னுடைய வேதனைகளின், உபத்திரவங்களின் முடிவாக இருக்கிறது, உன்னுடைய வியாதியின் முடிவாக இருக்கிறது, வேதனைகள் மூலமாக வருகிற எல்லா பிசாசுகளினால், அஸ்திபாரத்தை ஒருபோதும் அசைக்க முடியாது, ஒவ்வொரு மருத்துவரும் அது தவறு என்று சொன்னால் கூட "ஏனென்றால் இந்த பாறையின் மேல் என்னுடைய சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை." 108. அது அதற்கு விரோதமாக இருப்பினும், அதனால் மேற்கொள்ள முடியாது. ஒவ்வொரு முறையும், "வெள்ளம் போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாக கொடியேற்றுவார்." அதை நீங்கள் பார்க்கிறீர்களா? உங்களுக்கு புரிந்துவிட்டதா? இப்போது, இயேசு அவருடைய சீஷர்களுக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். 109. ஆராதிப்பதற்கு ஆபேல் செய்தது போலவே காயினும் ஒரு காணிக்கையை கொண்டு வந்த போது, ஏதேன் தோட்டத்தில் என்ன நடந்தது என்று கவனித்துப் பாருங்கள். அவன் ஆராதித்தான்; சபைக்குக் காணிக்கைகளைச் செலுத்தினான்; அவன் பலி செலுத்தினான், அவன் மார்க்க சம்பந்தமான ஒவ்வொன்றையும் பிரகாசமாகவும், சிறப்பாகவும் ஆபேல் செய்ததைக் காட்டிலும் மிகப் பொருத்தமாகவும் செய்தான். அவன் சிறந்த பலி பீடம் ஒன்றைக் கட்டினான்; அதை அவன் மிக அழகாகச் செய்தான்; அவனுடைய ஆராதனைக்குக் கவர்ச்சி உண்டு பண்ணினான். ஆதாமுடைய புத்திரர் களுக்குள் அத்தகைய சுபாவம் இன்னும் கிரியை செய்து கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்? வயல் வெளியின் கனிகளால் மற்றும் பெரிய லீலி புஷ்பங்களால் கவர்ச்சியை உண்டு பண்ணினான். அவன் அது மாத்திரம் செய்யவில்லை, ஆனால் அவன் அவரை ஆராதித்தான். "மனுஷனுக்கு செம்மையாய் தோன்றுகிற வழியுண்டு. ஆனால், அவன் என்ன செய்தான், அவனுடைய அறிவின் மூலமாக அவன் ஆராதித்தான். வெளிப்பாட்டின் மூலமாக அவன் ஆராதனை செய்யவில்லை. 110. இப்போது, அது முடியும். புரிந்து கொண்டீர்களா, கவனியுங்கள், அறிவுப் பூர்வமாக நீங்கள் ஆராதனை செய்யலாம். அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக, அறிவுப் பூர்வமாக நீங்கள் சபைக்குச் செல்லக்கூடும். ஆனால் அவ்வாறு சபைக்குச் சென்று ஆராதிப்பது வீணாகும். ஆனால் உன்னுடைய இருதயத்தின் ஆழத்தில் ஏதோ ஒன்று சம்பவிக்கும் போது, அது உன்னைத் தேவனை நேசிக்கும் படி செய்கிறது, சபை கூடுதலுக்கு செல்லாமல் தரித்திருக்க வைக்காமல், அது தான் வெளிப்பாடு, தேவன் வெளிப்படுத்துகிறார். 111. அப்போது அவர்கள் பரிசுத்த வேதாகமத்தைக் வைத்திருக் கவில்லை. எழுதுவதற்கு தாள்களையோ அல்லது எழுது பலகையையோ அவர்கள் கொண்டிருக்கவில்லை, கற்பதற்கு பள்ளிக்கூடம் அவர்களுக்கு இல்லை. ஆகவே ஆபேல் வெளிப்பாட்டின் மூலமாக... அது தேவனால் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அது அழகுள்ளதாய் இருக்கவில்லை, வயல் வெளியின் பழங்களாகவும் அது இருக்கவில்லை, அல்லது, ஏதேன் தோட்டத்தை விட்டு அவர்களை வெளியே துரத்தினது ஆப்பிள் பழங்கள் அல்ல, ஆனால் அது இரத்தமாக இருந்தது. அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது, அவன் சென்று ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்தான். வெளிப்பாட்டின் மூலமாக நீதியுள்ள ஆட்டுக்குட்டி வருகிறது என்பதை முன்னறிந்தான். அது அவனுக்கு வெளிப் படுத்தப்பட்டது, ஆகவே அவன் ஒரு செம்மறி ஆட்டுக்கடாவைப் பிடித்தான். மேலும் வெளிப்பாட்டின் மூலமாகவே அதை தேவனுக்குப் பலி செலுத்தினான், தேவன் அதை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்தார். முழு சபையும் ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல் கட்டப் பட்டுள்ளது. எவ்வளவு அழகாயிருக்கிறது! 112. இப்போது, முடிக்கப் போகிறோம். அவர்கள் மலையின் மேல் இருந்தார்கள். இயேசு ஒரு கீழ்ப்படிதல் உள்ள குமாரனான பின்பு, மாமிசமான, அந்த ஆட்டுக்குட்டி, பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்டது. தேவனே, அவரில் அசைவாடினார்... "என்னுடைய சித்தத்தை நிறை வேற்றுவதற்காக நான் வரவில்லை, என்னை அனுப்பினவருடைய சித்தத்தையே செய்ய வந்தேன். என்னை அனுப்பின அந்த ஒருவர், என்னை அனுப்பின பிதா என்னுடன் இருக்கிறார். பிதா என்னை அனுப்பினார், என்னுடன் வந்தார், அதேபோல் நான் உங்களை அனுப்புகிறேன்" அவர் அனுப்பினதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர் அவருடனே சென்றார், அவருடனே இருந்தார். 113. கல்வி கற்ற வேதாகம பாடசாலை அனுபவத் தோடு பிரகடனப்படுத்தும் ஒரு மனிதனை தேவன் அனுப்ப மாட்டார், ஆனால் அவன் ஆயத்தம் உள்ளவனாக இருப்பானேயானால், தேவன் அவனுடன் செல்கிறார். "நான் உங்களோடு இருப்பேன், உலகத்தின் முடிவு பரியந்தமும் உங்களுக்குள்ளாக இருப்பேன்." 114. கவனியுங்கள், மிகவும் அழகாக, ஓ, எவ்வாறு வார்த்தையும் அந்த மனிதனும் ஒன்றாய் செல்கின்றனர். எவ்வாறு பரிசுத்த ஆவியானவர் வெளிப்பாட்டின் மூலமாகவும் கர்த்தராகிய இயேசுவின் அன்பினாலும் அது ஜனங்களுடைய இருதயத்தில் பதிந்துவிடும் படி செய்கிறார். உற்றுக் கவனியுங்கள். 115. அங்கே, கீழ்ப்படிதலுக்கு பின்னர், "இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்கினால்," இவர்கள் தான் பூமியில் நின்ற சிறந்த சாட்சிகளாகும்; அன்பு... பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான்; நம்பிக்கை, விசுவாசம், அன்பு... நம்பிக்கை என்னும் சாட்சியின் கீழ், விசுவாசம் என்னும் சாட்சியின் கீழ், அன்பு என்னும் சாட்சியின் கீழ், உலகம் ஒருபோதும் அறிந்திராத மூன்று மகத்தான வெளிப்படுதல்களினால், தேவன் அவருடைய குமாரனை அவருடைய ஸ்தானத்தில் பொது ஜனங்கள் மத்தியில் நிலை நிறுத்தினார். 116.அங்கே, முந்தைய நாட்களில், ஒரு தகப்பனார், தன்னுடைய குமாரனை வெளியே கொண்டு வந்து, அவன் மீது ஒரு அங்கியை அணிவித்து, ஒரு விழா எடுப்பார், அதன் பிறகு அவனுடைய தந்தையின் பெயரை போல அந்த குமாரனுடைய பெயர், சிறப்பாக இருக்கும், அந்த குமாரன் எல்லாவற்றிற்கும் சுதந்தர வாளியாகிறான். 117. தேவன், கிறிஸ்துவை மறுரூப மலைக்கு அழைத்துச் சென்றார், அங்கே நம்பிக்கை, விசுவாசம் மற்றும் அன்பு என்னும் சாட்சிகள் இருந்தன, அங்கே அவரை ஒரு மேகம் மூடியது. "அவருடைய வஸ்திரம் சூரியனைப் போல பிரகாசித்தது, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன் என்று கூறிற்று" என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. 118. இப்போது, பேதுரு வழக்கம் போல பிரமிப்படைந்தான். அவன் மிகவும் வைராக்கியம் உள்ள மனிதனாக இருந்தான், நாம் அனைவரும் அவ்விதமான வைராக்கியம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன். அநேக சமயங்களில் உங்களுடைய வைராக்கியமான கிரியைகளைக் குறித்த நல்ல காரியங்களை நீங்கள் பேசக் கூடும். உண்மையிலேயே அங்கு நடந்ததைப் பேதுரு பார்த்த போது, மிகவும் உற்சாகம் கொண்டான். அவர்கள் மலையை விட்டு இறங்கின சற்று நேரத்தில் அத்தகைய சாட்சியை உடையவராய் இருக்கும் படி தேவன் அவரை அனுமதித்தார். ஆனால், அங்கு நின்று கொண்டிருப்பதை... அவர் பார்த்த போது, அங்கே நம்பிக்கை, விசுவாசம் மற்றும் அன்பு என்னும் மூன்று பேர் இருந்தனர். அந்த மலையின் மேல் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். இங்கே பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் இருந்தனர், அங்கே மோசே, எலியா மற்றும் கிறிஸ்து ஆகிய மூவரும் நின்று கொண்டிருந்தனர், இந்த மூவருடனும் ஒரு உறுதிப்பாடு ஏற்படுத்தப்பட்டது. இப்போது, அவர்கள் பார்த்தார்கள், முதலாவது அங்கு மோசே நின்றான்; அதற்கடுத்ததாக தீர்க்கதரிசியாகிய எலியா நின்றான். 119. "அங்கே நாம் சென்றடையும் போது ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்வோமா?" என்று சில ஜனங்கள் நம்மைக் கேட்கிறார்கள். எலியாவும், மோசேயும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சென்று விட்டார்கள்... ஒருவரை ஒருவர் நாம் அறிந்து கொள்வது மட்டுமல்ல; நாம் ஒருபோதும் பார்த்திராத வர்களையும் நாம் அறிந்து கொள்வோம். பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் இவர்கள் எல்லாம் ஒருபோதும் மோசேயைப் பார்க்கவில்லை, அப்படி யிருந்தும், அவர்கள் சர்வ வல்லவருடைய நிழலில் நின்று கொண்டிருக்கும் போது, இமைப்பொழுதில் அவர்களை அடையாளம் கண்டு கொண்டார்கள். அப்படியானால் நாம் அங்கே நிற்கும் போது அது எப்படிப்பட்டதாயிருக்கும்? நான் அவரை பார்க்கும் போது, அவர் சாங்கி [Sankey) தான் என்பதை அறிந்து கொள்வேன். நான் அவருடைய சத்தத்தை ஒருபோதும் கேட்டதில்லை எனினும் அவருடைய சத்தம் என்பதை நான் அறிவேன். நான் வெஸ்லியை அறிவேன். நான் மூடி, கால்வின், நாக்ஸ் (Moody, Calvin, Knox) என்பவர்களையும் அறிவேன். நாம் அங்கு சென்றடையும் போது, அவர்கள் எல்லோரையும் நாம் அறிந்து கொள்வோம். நாம் இப்போது இருப்பதைக் காட்டிலும், ஒரு வித்தியாசமான நிலையை அடைவோம். ஒருவர் முகத்தைப் பார்த்த உடனேயே அது அவர்தான் என்கிற உணர்வு நமக்குள் உண்டாகும். நாம் ஒரு தற்காலிகமான நிலையிலோ அல்லது-அல்லது மகிமை அடைந்த நிலையிலோ இருப்போம்; பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் எப்படி இருந்தார்களோ. ஆகவே அந்த முன் காட்சியில், மனிதர்களை அவர்கள் எந்த குறைபாடும், சந்தேகமும் இன்றி அடையாளம் கண்டு கொள்வார்கள், அவர்கள் ஒருபோதும் பார்த்திராதது அல்லது அதன் படத்தைக் கூட பார்க்க வில்லை, பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நம்மை விட்டு கடந்து சென்றுவிட்டனர், ஆனால் அந்த முன் காட்சியில் இமைப்பொழுதில் சந்தேகமின்றி அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள், நாம் மகிமையடைந்து அவருடைய பிரசன்னத்தில் நிற்கும் போது அது எப்பேர்ப்பட்டதாக இருக்கும்? நாம் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வோமா? நிச்சயமாக, நாம் ஒவ்வொருவரையும் அறிந்து கொள்வோம் தேவன் எல்லையற்றவராக இருப்பதினால், அந்த எல்லையற்ற தன்மையில் ஒரு சிறிதளவு நம்மிலும் வைக்கப்படும். கவனியுங்கள், நான் முடிக்கவேண்டும். அவர்கள் பார்த்தபோது, மேலும் பேதுரு.. 120. உண்மையான, திறமை வாய்ந்த, வேதாகமப் பள்ளி மாணவன், "உங்களுக்கு தெரியுமா, நான் எல்லா சபைகளும் சரியாய் இருக்கின்றன என்று நான் விசுவாசிக்கிறேன்" என்று அவன் கூறுவான். [ஒலிநாடாவில் காலியிடம் ஆசி) உங்களுடைய விசுவாசத்தில் பாரம்பரியம் (ஐதீகம்) உடையவர்களாய் இருப்பீர்கள் என்றால், அது ஒரு பொருட்டல்ல. ஆகவே நாம் முகமதியர்கள் மற்றும் புத்த மதத்தையோ அனுசரிக்கலாம், அவைகளை ஒன்று சேர்த்து விசுவாசிக்கலாம். 121. பேதுரு, "நாம் இங்கிருப்பது நமக்கு நல்லது, ஆகவே நாம் மூன்று கூடாரங்களைப் போடுவோம். நாம் இங்கே மோசேக்கு ஒரு வேதபாட சாலையை அமைப்போம், எலியாவுக்கு ஒரு வேதபாட சாலையை அமைப்போம், நியாயப் பிரமாணத்தின் கீழ் உள்ளவைகளில் விருப்பப்பட்டவர்கள் எல்லோரும் ஆராதிக்கட்டும்" என்று கூறினான். மேலும் இப்போது, அவர்கள் பார்த்தார்கள், பேதுருவும் மற்றவர்களும் மோசேயைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்... என்று நாம் பார்க்கிறோம். மோசே நியாயப்பிரமாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தினான். 122. தேவன் இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயப் பிரமாணத்தைக் கொடுத்தார், ஏனென்றால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை விரும்பினார்கள். தேவன் அவைகளை அவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. அது மனிதனால் தெரிந்து கொள்ளப் பட்டது. யாத்திராகமம் 19-ல் அவர்கள், "இரட்சிப்பை இலவசமாய்ப் பெறுவதற்கு ஏதோ ஒன்றை எங்களுக்குத் தாரும்" என்று கேட்டார்கள். நீர் எங்களுக்கு நியாயப் பிரமாணத்தைக் கொடுப்பீர் என்றால், நாங்கள் அதை கடைப்பிடிப்போம் என்றார்கள். ஆனால் ஒருபோதும் அது தேவனுடைய திட்டமாக இல்லை. 123. ஆகவே நீங்களாகவே திட்டம் வகுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது, அதை விட்டு விட வேண்டும், அவருடைய திட்டங்களையே நாம் பயன் படுத்துவோமாக. அவருடைய திட்டங்களை எடுத்துக் கொள்ளும் போது, அது மிகவும் சுலபமாக இருப்பதை நான் கண்டுள்ளேன். 124. அங்கே மோசே இருந்தான், அது நியாயப் பிரமாணம். பேதுரு, "நல்லது, நம்மில் சிலர் நியாயப் பிரமாணத்தைக் கடைப்பிடிப்போம்" என்று கூறினான். இப்போது, நியாயப் பிரமாணத்தினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப் படுவதில்லையே. 125. ஆகவே, தேவனுடைய நியாயப்பிரமாணத் திற்குப் பிறகு அங்கே நிற்பது, அங்கே நின்றது எலியாவாகும், அவன் மோசேக்குப் பின் வந்தான். எலியா தேவனுடைய நியாயாத்தீர்ப்பை பிரதிநிதித்து வப்படுத்துபவனாக இருந்தான், தீர்க்கதரிசிகள் யாவரும் அவ்வாறே இருந்தனர். மேலும் எலியா அவருடைய நியாயத்தீர்ப்பை பிரதிநிதித்துவப்படுத்தினான், வானத்திலிருந்து எவ்வளவு அக்கினியை இழுக்க முடியுமோ அவ்வளவுக்கதிகமாய் இழுத்து, அது ஐம்பது ஐம்பது பேராய் கொன்று போட்டது. அவன் தேவனுடைய நியாயத்தீர்ப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தினான். ஆகவே, பேதுரு தேவனுடைய நியாயப் பிரமாணத்தையும் தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் விரும்பினான். 126. நியாயப்பிரமாணத்தினால் ஒரு மனிதனும் இரட்சிக்கப் படுவதில்லை. நீங்கள் கடைப்பிடிக்கத் தவறினாலும், நியாயப்பிரமாணத்தை மீறினாலும், ஒன்றே ஒன்று தான் விடப்பட்டுள்ளது, அது மரணமே. அதுதான் தேவனுடைய நீதி. தேவன்-தேவன் அதை அதிகாரத்தோடு கேட்கிறார். அவருடைய நீதியுள்ள நியாயப்பிரமாணம் நீதி சரிகட்டுதலைக் கொண்டிருக்க வேண்டும். 127. ஆகவே, பேதுரு பேசும் போது, மூன்று கூடாரங்களைப் போடுவதற்கு விரும்பினான், அதைச் செய்யக் கூடுமா என்று என்று அவன் தேவனிடத்தில் கேட்டான், அதன்பின் அவர்கள் பின்னால் திரும்பிப் பார்த்த போது, இயேசுவை மட்டுமே பார்த்தார்கள். 128. நியாயப்பிரமாணம் தோற்றுப் போய்விட்டது. இந்தக் காலை வேளையில், நாம் நம்முடைய சுய நீதியிலிருந்தும், அல்லது நாம் செய்த ஏதோ ஒன்றினாலே அல்ல, அப்படிப்பட்ட எண்ணங்களி லிருந்த நம்முடைய பார்வையை உதறிப் போடுவோமாக. நான் நியாயப்பிரமாணத்திற்காக வழக்காட மாட்டேன், பரிந்துபேச மாட்டேன். நியாயப்பிரமாணத்தினால் நான் நியாயம் தீர்க்கப்பட முடியாது. ஏனென்றால் நான் நியாயப் பிரமாணத்திற்குக் கட்டுப் பட்டவன் அல்ல. ஒரு மனிதனும் நியாயப்பிரமாணத்தைக் கடைப் பிடிக்கவில்லை. அவர்களால் நியாயப்பிரமாணத்தைக் கடை பிடிக்க முடியவில்லை. 129. மேலும் உங்களை நீங்களே இரட்சித்துக் கொள்ள முடியாது. உங்களை நீங்களே சுகமாக்கிக் கொள்ளவும் முடியாது. நியாயப்பிரமாணத்தை உங்கள் சுய சித்தத்தைக் கொண்டு திட்டமிடுதலுக்காக அதைப் பெரிதுபடுத்த விரும்பினால், நியாயப்பிரமாணத்திற்கு ஒரே ஒரு காரியம் தான் தேவைப்படுவதாக இருக்கிறது, அதை நீங்கள் நிறைவேற்ற தவறினால், அது நியாயத்தீர்ப்பை கொண்டு வரும். நியாயத்தீர்ப்பு கண்டனம் செய்யப்பட வேண்டும், மற்றும் அது நித்தியமாக மரிக்க வேண்டும். அதற்கு தேவைப்படுவது ஒரு முற்றிலுமான அழிவே, எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டி ருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான். ஆகவே நீ மரித்தே ஆக வேண்டும். ஆனால் தேவன், நாம் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் பார்க்கும் போது, தேவனுடைய நியாயத்தீர்ப்பைப் பார்க்கும் போது. . . 130. வேறு ஒருவழியில் நம்முடைய பார்வையைத் திருப்புவோமாக. இங்கே கவனியுங்கள், அங்கே இயேசு நின்றார், அது தேவனுடைய அன்பைப் பிரதி நிதித்துவப்படுத்துவதாகும், நியாயப்பிரமாணத்தை அல்ல. நீதி சரிகட்டுதலும் அல்ல, ஆனால் நியாயப் பிரமாணமும் நியாயத்தீர்ப்பும் ஆகிய இரண்டும் அவரில், "இவர் என்னுடைய நேசகுமாரன்." தன்னைத் தான் உருவாக்கிக் கொண்ட எதுவும் அங்கில்லை, உங்கள் உபாத்தியாயர் சொல்வதைக் கவனியுங்கள். அதன் காரணமாகத் தான் "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்று பேதுருவால் சொல்ல முடிந்தது. நியாயப் பிரமாணமும் நீதி சரிக்கட்டுதலும் கிறிஸ்துவில் சந்தித்தது, அது மனித இனத்திற்கு அருளப்பட்ட தேவனுடைய அன்பு. தேவனுடைய அன்பு! தேவன் இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். 131. இரக்கத்தில் ஐசுவரியம் உள்ள தேவனே, இந்தக் காலை வேளையில் நான் இந்த ஜனக் கூட்டத்திற்காக பரிந்து பேசுகையில், நாங்கள் ஒரு நியாயப்பிரமாணத்திற்காகப் பரிந்து பேசவில்லை. எந்த நியாயப்பிரமாணத்தையும் நாங்கள் கேட்க மாட்டோம். எங்களுடைய சொந்தத் தகுதியினிமித்தம் நாங்கள் நியாயந்தீர்க்கப்பட விரும்பவில்லை. கர்த்தாவே உம்முடைய நியாயத்தீர்ப்பை நான் விரும்பவில்லை, இல்லை, உம்முடைய நியாயத்தீர்ப்பு என்மீது வராதிருப் பதாக, கர்த்தாவே, ஒருபோதும் வேண்டாம். ஆனால் நான் உம்முடைய இரக்கத்திற்காகவே மன்றாடுகிறேன். 132. அவர், "அவருக்குச் செவிகொடுங்கள்" என்று கூறினார். நான் ஏன் அவருக்குச் செவி கொடுக்க வேண்டும்? அவர் ஒருவரே இரட்சிப்பை உடையவராக இருக்கிறார். மரியாள், யோசேப்பு மற்றும் உள்ள எல்லா பரிசுத்தவான்களும் மகத்தான ஜனங்கள், ஆனால் அவரில் மாத்திரம் இரட்சிப்பு உண்டு. அவருக்கு செவி கொடுங்கள். அவர் ஒருவரே பரிந்து பேசுகிறவராயிருக் கிறார். அவர் ஒருவரே தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் மத்தியஸ்தராயிருக்கிறார், அது இயேசு கிறிஸ்துவே. 133. நான் ஏன் அவருக்கு செவி கொடுக்க வேண்டும்? நியாயப்பிரமாணத்தினால் எனக்குச் சமாதானத்தை கொடுக்க முடியவில்லை, அவரால் கூடும். நியாயத்தீர்ப்பு ஒன்றையும் எனக்குக் கொண்டு வருவதில்லை. அது கண்டனப்படுத்தும், அது ஒன்றே அது செய்யக்கூடியது; அவர் எனக்குச் சமாதானத் தையும் ஒப்புரவாகுதலையும் கொடுக்கிறார். நியாயப் பிரமாணம் என்னை கண்டனம் செய்யும், ஏனென்றால் நான் வியாதிப்பட்டால், நியாயப்பிரமாணத்திற்குத் தேவையானது நான் இயற்கையின் விதிகளை மீறிவிட்டேன். தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்மீது செயல்படுத்தப்படுகிறது, ஆகவே, நான் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் இந்தக் காலை வேளையில் நான் என்னுடைய பாசத்தையும், அன்பையும் கொண்ட கண்களை நியாயப்பிரமாணம் மற்றும் நீதி சரிகட்டுதல் ஆகிய இரண்டையும் விட்டு திருப்புகிறேன், மேலும் தேவனுடைய அன்பையே நோக்கிப் பார்க்கிறேன், கிருபையினால் அவருடன் என்னை ஒப்புரவாக்கிக் கொண்டார். நியாயப் பிரமாணத்தின் மூலமாக அல்ல, நீதி சரிகட்டுதல் மூலமாகவும் அல்ல, ஆனால் ஒப்புரவாகுதல் மூலமாக, மனிதனையும் தேவனையும் ஒன்று சேர்த்து, அவர்கள் இருவரும் ஒருவராய் இருக்கத்தக்க விலைக்கிரயத்தை அவர் செலுத்தினார். 134. அங்கே சுவிட்ஸர்லாந்தில், அதிக காலத்திற்கு முன்பல்ல, இந்தக் கருத்தைக் கூறிவிட்டு நான் கூட்டத்தை முடிக்க வேண்டும்... உங்களில் அநேகர் சிறு பிள்ளைகளாய்ப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்திருப்பீர்கள், இப்போது கூட அதை உங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள், அது ஒரு பழைய கதை, அது ஒருபோதும் மரித்து விடக்கூடாது, இந்நாட்களில் நம்முடைய தேசத்தில் அது மங்கிக் கொண்டு வருகிறது; ஆனால் அது சுவிட்ஸர்லாந்தில் ஒருபோதும் அது மங்கிப்போகாது, அது சம்பவித்தது அங்கு தான். உங்கள் பள்ளிப்படிப்பின் காலத்தை நினைவில் வைத்துள்ளீர்களா, உங்கள் பாடப் புத்தகத்தில் உள்ள அர்னால்டு வொன் விஸ்கல்ரைடு. [Arnold Von Wiskalried] அவர் சுவிட்ஸர்லாந்தின் மகத்தான போர் வீரர் ஆவார். அவரை நினைவிருக்கிறதா? சுவிட்ஸர் லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் இன்று கூட அவருடைய பெயரை நீங்கள் குறிப்பிடுவீர்களானால், அதைக் கேட்ட மாத்திரத்தில் அவர்களின் முகங்கள் சிவக்கும், அவர்களின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடும். பல வருடங்களுக்கு முன்... 135. சுவிஸ் ஜனங்கள் சமாதானத்தை நேசிப்ப வர்கள். அவர்கள் ஜெர்மானியர்கள், தொடக்கக் காலத்தில் நூற்றாண்டுகளுக்கு முன் மலைகளுக்குச் சென்றார்கள், அங்கு தாது பொருட்கள் மற்றும் எதுவுமே கிடையாது. ஆனால் அவர்கள் விலைக்கு வாங்கினார்கள்... ஜெர்மனியர்களின் புத்திக் கூர்மையை அவர்கள் பெற்றிருந்தனர். அவர்கள்தான் சிறந்த இனம் என்று தங்களுக்குள் எண்ணிக் கொள்வார்கள், அது உண்மை. ஆனால் அவனுடைய புத்திக்கூர்மையைக் கொண்டு முழு உலகத்தையும் ஜெயிக்கத்தக்கதாக துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறான். ஆனால் சுவிஸ் மனிதன் சமாதானத்தை நேசிப்பவனாக இருக்கிறான். அவன் அங்கே கீழே சென்று தன்னை உருவாக்கிக் கொள்கிறான், சில பொருட்களைப் பெறுகிறான், தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு கடிகாரத்தை உண்டு பண்ணுகிறான், சமாதானத்தோடு வாழ்கிறான். 136. பல வருடங்களுக்கு முன்... சுவிஸ் மலையின் உச்சியில், உயர்ந்த மலையில், அவர்களுடைய இராஜ்ஜியத்தை-அவர்கள் ஸ்தாபிக்கும் போது, அல்லது, அவர்களுடைய அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போது என்று நான் கூறுவேன்... அவர்கள் இராணுவத்தைக் கொண்ட ஒரு தேசமாக இருக்க வில்லை; அவர்கள் சமாதானத்தை விரும்பும் தேசமாக இருந்தனர். 137. ஒரு நாள், படையெடுப்பாளர்கள் அவர் களுடைய தேசத்துக்குள் நுழைந்தனர், அவர்கள் பெற்றிருந்த எல்லாவற்றையும் மிதித்து அழித்து போட்டார்கள்... ஒன்றுமே இல்லை, ஒன்றுமே இல்லை, அவர்கள் என்னவெல்லாம் கட்டியிருந்தார்களோ, அதை இடித்து கற்களையெல்லாம் மலைகளில் தள்ளி விட்டார்கள், அதைக் குறித்து அவர்கள் ஒருபோதும் கவலை அடையவில்லை. மலையின் அடிவாரத்தில் சுவிஸ் இராணுவம் பரந்த நிலப்பரப்பில் குவிக்கப் பட்டிருந்தது. 138. சுவிட்ஸர்லாந்து அழகிய இடம், நான் எவ்வாறு அவைகளையெல்லாம் கவனித்தேன், மலை அடிவாரப் பள்ளத்தாக்குகளில் அவர்கள் எவ்வாறு விவசாய பண்ணைகளை அமைத்துள்ளனர், அதற்கு அடுத்து கால்நடைகள், இன்னும் சற்று மலை உயரத்தில் சென்றால் அங்கே ஆடுகள் வளர்ப்பு, மலை உச்சி முழுவதும் அங்கே அவர்களுடைய ஆடுகளை வளர்க்கிறார்கள். 139. அவர்கள் எவ்வாறு இசை இசைக்கிறார்கள், இந்த அமெரிக்க ஹாலிவுட்டில் இசை இசைப்பவர்கள் இசையை இழுத்து பரிகாசம் செய்கிறார்கள். ஒருபோதும் இதனை அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. பிரச்சனைகள் வரும் போது அவர்கள் எவ்வாறு அவர்களுடைய கொம்புகளை ஊது கிறார்கள்...? ஒவ்வொரு பக்கத்து வீட்டுக்காரர்களும் உதவி செய்வதற்காக ஓடி ஒன்று கூடுகிறார்கள். அவர்களுக்குத் தேவை ஏற்படும் போது எவ்வாறு உதவி செய்கின்றனர். இப்போதும் நாம் அதை இசைக் கச்சேரியில் முன்னணியில் இருப்பவர்களுக்கும், ராக்- அண்டு-ரோல் நடனத்திற்கும் அவைகளைப் பயன் படுத்துகிறோம். ஓ, அது எவ்வளவாய்... எவ்வாறு மாசுபடிந்துள்ளது... 140. நண்பர்களே கவனியுங்கள், என்னுடைய மேலாளரைக் (நிர்வாகி) குறித்து ஒரு குறிப்பை வைக்கிறேன். தேவன் வெகு விரைவில் இந்த விபச்சார ஜனங்களாகிய சந்ததியில் அவருடைய நியாயத்தீர்ப்பை ஊற்றவில்லை என்றால், அவர் சோதோம் கோமோரா ஜனங்களை எழுப்பி அவர்களை எரித்துப் போட்டதற்காக மன்னிப்பு கோர வேண்டும். அது சரியா, நிச்சயமாக. அவர் நீதியுள்ளவர், அதைவிட அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் தேவன் அதை செய்ய வேண்டும். இரக்கம் அவருடைய கரங்களைத் திறந்து வைத்துள்ள போதே அதற்குள் ஓடிவிடுங்கள். அங்கே... 141. மலையின் மேலே, அங்கே அந்த சிறிய ராணுவம் அவர்களுக்குக் கிடைத்ததை கையில் எடுத்துக் கொண்டும், கையில் கேடயங்களை ஏந்திக் கொண்டும், கம்புகளையும், மரம் அறுக்கும் வாள்களையும், வேறு என்னவெல்லாம் அவர்களுக்குக் கிடைத்ததோ அவை களையும், இன்னும் மண்வெட்டிகளையும் தோளில் போட்டுக் கொண்டு நின்றார்கள். பயங்கரமான பகைவனின் ராணுவம் செங்கற்களால் கட்டப்பட்டச் சுவர் போல வந்துவிட்டார்கள். அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பயிற்சி பெற்றவர்கள், பெரிய பெரிய ஈட்டிகளை வைத்துக்கொண்டு, முன்னே நடந்து, மிகவும் அருகில் வந்துவிட்டனர், இந்த சிறிய சுவிஸ் இராணுவத்தினரை வளைந்து கொண்டனர், மலைக்கு எதிரே வந்துவிட்டார்கள். அவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள், அவர்கள் எடுத்த முயற்சிகள் அத்தனையும் இருளாகி அந்தகாரம் சூழ்ந்து கொண்டது, அவர்களை இரட்சிப்பதற்கு ஒன்றுமே இல்லை. 142. சிறிது நேரத்திற்கு பிறகு, அவர்கள் மத்தியில் இருந்து ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது, அவர்தான் அர்னால்டு வொன் விஸ்கல்ரைடு [Arnold Von Wiskalried] என்பவராகும். அவர் முன்னே நடந்து வெளியே வந்தார், அவர், "சகோதரர்களே இன்று நான் சுவிட்ஸர்லாந்து தேசத்திற்காகவும் அதனுடைய சுதந்திரத்திற்காகவும் மரிப்பேன்," என்று கூறினார். அவர், "நாம் நம்முடைய தாய் நாட்டை நேசிக்கிறோம், மேலும் நம்முடைய பிதாக்கள் என்ன நோக்கத்திற்காக யுத்தம் செய்தார்களோ, மேலும் நம்முடைய பிதாக்கள் நாம் எதைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கம் உடையவர்களாய் இருந்தார்களோ அதற்காக மரிக்கிறேன். மேலும் இன்று நம்முடைய மகத்தான பொருளாதரம் பங்கு போடப் படக்கூடிய நிலையில் உள்ளது. மேலும் இன்று சுவிட்ஸர்லாந்து தேசத்திற்காக இலவசமாக, கிரயமின்றி என் ஜீவனைக் கொடுக்கிறேன்" என்றார். அவர், "அங்கே தூரத்தில் மலைகளுக்குப் பின்னால் என்னுடைய அன்பான வீடு இருக்கிறது, என்னுடைய இனிமையான அன்பான மனைவி இருக்கிறாள், என்னுடைய சிறுபிள்ளைகள் இருக்கிறார்கள், நான் திரும்பி வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார். ஆனால், "அவர்களை நான் இந்தப் பூமியில் மறுபடியும் ஒருபோதும் பார்க்க மாட்டேன்" என்று கூறினார். அவர், "இன்று நான் சுவிட்ஸர்லாந்துக்காக மரிப்பேன்" என்று சொன்னார். அவர்... அதற்கு அவர்கள், "அர்னால்டு வொன் விஸ்கல்ரைடு [Arnold Von Wiskalried] அவர்களே நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்", என்று கேட்டனர். 143. அவர், "என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். இராணுவத்தின் தரவரிசையை நான் உடைத்துப் போடுவேன். அவர்களுடைய பாதுகாப்பு அரணை உடைத்துப் போடுவேன். பின்பு நீங்கள் என்ன என்ன வைத்துள்ளீர்களோ அதை கையில் எடுத்துக் கொள்ளுங்கள், உங்களால் எவ்வளவு சிறப்பாக, கடினமாக யுத்தம் செய்ய முடியுமோ அவ்வளவாய் சண்டையிடுங்கள். யுத்த புருஷர்கள் போல எதை வைத்துள்ளீர்களோ அதைக் கொண்டு உங்களால் எவ்வளவு சிறப்பாக, கடினமாக யுத்தம் செய்யக் கூடுமோ அவ்வளவாய் போராடுங்கள்" என்று கூறினார். 144. மேலும் தன்னுடைய கைகளை உயர்த்தினார், சுற்றிலும் பார்த்தார், எங்கே பலமுள்ள ஈட்டிகளைக் கொண்டவர்கள் வருகிறார்களோ அவர்களை எதிர் கொண்டு அங்குல அங்குலமாக முன்னேறிச் சென்றார். அவர் தன்னுடைய கரங்களை உயர்த்திக்கொண்டு, "சுதந்திரத்திற்கான வழியை ஏற்படுத்துங்கள்" என்று ஆர்ப்பரித்தார். அரணாயிருக்கிற செங்கற்சுவரைப் போல அவரை நோக்கி வந்து கொண்டிருப்பவர் களுக்கு எதிராக ஓடினார். "சுதந்திரத்திற்கான வழியை ஏற்படுத்துங்கள்," என்று ஆர்ப்பரித்தார். ஈட்டிகளை ஏந்தி மிக நெருக்கமாய் நின்று கொண்டு இருக்கும் எதிர் அணியினரை நோக்கி ஓடினார், அந்த ஈட்டிகளைச் சுற்றி தன்னுடைய கரங்களைப் போட்டு, ஈட்டிகளைக் கூட்டிப் பிடித்தார், அவைகளைத் தன்னுடைய நெஞ்சில் ஏந்திக்கொண்டு மறித்தார். சுவிஸ் மனிதர்கள், அவரைப் பின்தொடர்ந்து சென்றவர்கள், அவர்கள் கைகளில் வைத்திருந்த வைகளைக் கொண்டு, உற்சாக மிகுதியால், இராணுவத்தின் தரவரிசையை உடைத்துப் போடும் மட்டும் அவர்கள் மேல் எறிந்தார்கள், ஒவ்வொரு மனிதனும் என்ன செய்வதென்று திகைத்தனர்; அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்கள், சுவிஸ் வீரர்கள் இராணுவத்திற்குள் புகுந்து வெற்றி வாகை சூடினார்கள். சுவிட்ஸர்லாந்து தேசம் இதைப் போன்ற ஒரு யுத்தத்தை ஒருபோதும் சந்தித்ததே கிடையாது. சுவிட்ஸர்லாந்தில் இது நீண்ட காலத்திற்கு நினைவு கூறப்படும். சுவிட்ஸர்லாந்து என்னும் தேசம் இருக்கும் மட்டும், அர்னால்டு வொன் விஸ்கல்ரைடு (Arnold Von Wiskalried] என்பவரின் பெயரும் நினைவு கூறப்படும் 145. ஆனால் அது ஒரு பிரமிக்கத்தக்க வீரச் செயலாகும். அதற்கு இணையான ஒரு செயலை ஒருபோதும் ஒப்பிட்டுப் பேச முடியாது. ஆனால் அது ஒரு சிறிய காரியம் தான், மிகச்சிறிய காரியம். ஒரு நாள் ஆதாமின் குமாரர்கள்... 146. நியாயப்பிரமாணம் தோற்ற போது, தீர்க்க தரிசிகளின் நியாயத்தீர்ப்பு தோற்ற போது, நியாயப் பிரமாணம் பலவீனம் அடைந்த போது, ஆட்டுக் குட்டியை பலி செலுத்துவதினால் உலகத்தை இரட்சிக்க முடியாது என்ற நிலை வருமட்டும், மிருகத்தின் இரத்தமும், மிருகத்தின் ஆவியும் திரும்ப வர முடியாது, அது தோற்றுப் போய்விட்டது.... சாத்தான் அதைவிட அதிகமாய் அறிவான். எங்கே தேவனின் நியாயத்தீர்ப்பு உள்ளதோ, அக்கினியை வர வழைப்பது மட்டும், ஐம்பது ஐம்பது பேராய் எரித்துப் போடும் மட்டும், தீர்க்கதரிசிகளின் நியாயத்தீர்ப்பு பூமிக்கு கொடுக்கப் பட்டது மட்டும், மனிதன் தொடர்ந்து கேட்டிற்குள் பிரவேசித்தான். ஒவ்வொரு நம்பிக்கையும் போய் விட்டது. தேவன் நியாயப்பிரமாணத்தை அனுப்பினார், தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவைகள் அனைத்தும் தோற்றுப் போய்விட்டன. மனித இனத்திற்கென்று இருந்த நம்பிக்கையெல்லாம் போய்விட்டது. 147. ஒரு நாள், மகிமையின் தேசத்தின் மத்தியில் இருந்து, தேவகுமாரன் வெளியே அடியெடுத்து வைத்து, "இந்த நாளில் நான் சென்று ஆதாமின் புத்திரர்களை விடுதலையாக்குவேன்" என்று கூறினார். அங்கே அவர் தூரத்தில் நின்றிருந்த போது, எல்லா நம்பிக்கையும்... 148. பிசாசானவன் வியாதியை நம்மேல் வைப்பான்; பாவத்தை நம்மேல் சுமத்துவான். மேலும் அதை எடுத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருந்தோம். நியாயப்பிரமாணத்தின் நீதிக்கு அது தேவையாயிருந்து, உரிமை கோரிற்று. நியாயப் பிரமாணத்தை நாம் ஏற்றுக் கொள்ளத் தவறினால், அந்த நியாயப்பிரமாணத்தினால் நாம் அனைவரும் கண்டனத்துக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறோம், அங்கே நீதி சரிகட்டுதல் மட்டுமே செயல்படுத்தப்படும். அதைத் தவிர்த்து வேறு ஒருவழியும் இல்லை, நம்மால் ஒன்றும் செய்யக் கூடாது. 149. ஆனால் அவர் முன்னே அடியெடுத்து வைத்தார். தூதன், "நீர் என்ன செய்யப் போகிறீர்?" என்று கேட்டான். அவர் பூமிக்குச் சென்றார். 150. மேலும் அவர், "இப்போது, ஆதாமின் புத்திரராயிருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும், நான்... கொடுப்பதை எடுத்துக் கொண்டு, அதை வைத்து யுத்தம் செய்யுங்கள், உங்களால் கூடுமான வரைக்கும் போராடுங்கள், உங்களால் எவ்வளவு சிறப்பாய் செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாய் செய்யுங்கள்" என்று கூறினார். 151. மேலும் அவர், பலவீனமான பாகத்தை ஒருபோதும் காணவில்லை, இறையியல் மூலமாகவோ, அல்லது வேத பாடசாலைகளைக் கட்டுவதன் மூலமோ, அல்லது சபைக் கட்டிடங்களைக் கட்டுவதிலோ அப்படிப்பட்ட பலவீனமான பாகத்தை அவர் ஒருபோதும் பார்க்கவில்லை. ஆனால் அவர் எங்கே ஈட்டிகள் கனமுள்ளதாக, அடர்த்தியாக இருக்கிறதோ, அங்கே மரணப் பள்ளத்தாக்கின் வழியாக சென்றார். அவர் மரணம் மற்றும் வியாதிகள் அனைத்தையும் தம் கரங்களால் கூட்டித் தம் சொந்த மார்பில் சேர்த்துக் கொண்டார், பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியைத் திரும்ப அளித்தார், ஒவ்வொரு ஆதாமின் புத்திரர்களும் நம்மால் முடிந்த அளவுக்கு யுத்தம் செய்யும்படிக்கு தேவையானதை நம்முடைய கரங்களில் கொடுத்தார். நீங்கள் பரிகாசம் அடைந்தாலும், நீங்கள் உபத்திரவப்பட்டாலும், துன்புறுத்தப் பட்டாலும், நீங்கள் பரிசுத்த உருளைகள் என்று அழைக்கப்பட்டாலும், மற்றும் என்ன கூறினாலும், உங்களால் கூடுமானவரை போராடுங்கள், ஏனென்றால் ஜெயம் நிச்சயம், வெற்றி உறுதி, தேவனுக்கு நன்றி கூறுவோம், சத்துரு தோற்கடிக்கப்பட்டான். அதன் பாதுகாப்பு அரண்கள் தகர்க்கப்பட்டன. நம்முடைய இரட்சிப்பின் மகத்தான தளபதி, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமாக இன்று நம்மை வழிநடத்துகிறார். 152. ஓ, ஆதாமின் குமாரரும் குமாரத்திகளே, நீங்கள் ஏன் மரிக்கும்வரை இங்கேயே இருக்கிறீர்கள்? நாம் எழும்பி ஏதாவது கர்த்தருக்கென்று செய்வோம். நாம் என்ன வைத்திருக்கிறோமோ அதை எடுத்துக் கொள்ளுவோம். அது அழிந்துபோகாத உதடுகளாய் இருக்குமானால் அது இப்பொழுதும் அசையும், தேவனுக்கு துதியைச் செலுத்துவோமாக. நம்முடைய இரட்சிப்பிற்காக நாம் அவருக்கு நன்றி கூறுவோம். 153. நீங்கள் பாவியாய் இருந்தால், உங்களை ஒருபோதும் பாவியென்று கூறமாட்டீர்கள், சுவிசேஷத்தின் மூலமாக இந்தப் பூமியில் உள்ள கல்குவாரியிலிருந்து, அதை வெடிக்கச் செய்து உங்களை எடுத்துள்ளார். ஆனால், தேவன் உங்களைப் பார்த்து கட்டிடத்தில் உங்களை பொருத்தும் வரை அமைதியாயிருங்கள், 154. நீங்கள் சுகவீனமாயிருந்தால், இயேசு மரணத்தையும், பாதாளத்தையும், நோயையும், கல்லறையையும் ஜெயித்துள்ளார், மற்றும் உள்ள அனைத்திற்காகவும், உனக்காகவும் அவர் கல்வாரியில் மரித்தார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் காலை வேளையில் நாம் என்ன வைத்திருக்கிறோமோ அதை எடுத்துக்கொண்டு, நம்முடைய அறிவுக்கொப்ப சிறந்த போராட்டத்தை போராடுவோம். 155. ஜெபத்திற்காக நம் தலைகளைத் தாழ்த்தி யிருக்கையில்... சகோதரியை பியானோ வாசிக்கும் படி நான் அழைப்பேனேயானால், சில நல்ல கீர்த்தனைப் பாடல்களை இசைத்தால், நாம் அனைவரும் புலன் உணர்வுடையவர்களாயும், புத்தி தெளிந்தவர்களாயும் இருக்கையில்... 156. நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மரணத்தை இந்தக் காலை வேளையில் நீங்கள் பாராட்டுகிறீர்களா? அவர்கள் எவ்வளவு நல்லவர் களாக இருந்தாலும் சரி, உங்கள் சபைகள் நடக்காது. அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரி, உங்கள் பாட சாலைகள் பரிதாபமாய் தோற்றுப் போகும். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக, திறமை சாலிகளாக இருந்தாலும், உங்கள் மருத்துவர்கள் பரிதாபமான முறையில் தோற்றுப் போய்விடுவர். ஆனால் இந்தக் காலை வேளையில் நம்முடைய பார்வையைத் திருப்புவோமாக; சபைப் பிரமாணங்கள், கோட்பாடுகளிலிருந்தும், ஸ்தாபனங் களிலிருந்தும், மருத்துவ அலுவலகத்திலிருந்தும், அவைகள் எவ்வளவு நல்லவைகளாக இருந்தாலும் நம்முடைய கண்களைத் திருப்புவோமாக, சிலுவையின் நிழலிருந்து வரும் சத்தத்திற்கு நாம் செவிகொடுப்போமாக, அந்த நிழல் இன்று காலையில் நம்மேல் அசைவாடுகிறது. "இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவி கொடுங்கள்." 157. அன்புள்ள பரலோக பிதாவே, கிறிஸ்தவர்கள் என்ற நிலையில் எவ்வளவு தாழ்மையாய் அணுக முடியுமோ அவ்வளவு தாழ்மையாய் உம்மை அணுகுகிறோம், இழக்கப்பட்டவர்கள் மற்றும் தேவை யானவர்கள் சார்பில் உம்மிடம் வருகிறோம். இன்று இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளும், மேலும் ஓ, பரிசுத்த ஆவியானவரே சபையை வழி நடத்துகிறவரே, போதகராகிய நீர் இன்று உம்முடைய பிள்ளைகளைத் தேவனிடத்தில் நடத்தும். அநேகர் வழியருகில் விழுந்தவர்களாக இருக்கலாம், ஒருபோதும் கர்த்தருடைய வழி என்ன என்பதை அறியாதவர்களாய் இருக்கலாம். அவர்கள் இருளடைந்தும், கருமை சூழ்ந்துள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றனர், ஆனால் அவர்கள் மறுபடியும் கல்வாரியை நோக்கி பார்க்கட்டும், அங்கே சத்துருவாகிய மரணத்தை கொடூரமான ஈட்டிகளைப் பிடித்தீர், சத்துருவாகிய வியாதியைப் பிடித்தீர், சத்துருவாகிய கவலையை பிடித்தீர், மனித இனத்திற்கே சத்துருவாக இருந்தவனைப் பிடித்தீர். அங்கே அவைகளை உம்முடைய மார்பிலே ஏந்திக்கொண்டு, ஒரு வழியை உண்டாக்கினீர். இந்த காலை வேளையில், காலங்கள் தோறும் இருந்த நிழல்களின் வழியாக, நாங்கள் எங்களுடைய மகிமையின் வீட்டைப் பார்க்கிறோம். 158. அர்னால்டு வொன் விஸ்கல்ரைடு (Arnold Von Wiskalried] சொன்னதுபோல, "மலைகளுக்கு பின்னால் ஒருவீடு இருக்கிறது. அவர்கள் என்னுடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் என்னை ஒருபோதும் பார்க்கப் போவது இல்லை" என்று கூறினார். 159. ஆனால், இயேசுவோ, நீர் ஒருபோதும் அவ்வாறு "அவர்கள் என்னை ஒருபோதும் காண மாட்டார்கள்" என்று கூறவில்லை. "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும் படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்வேன்" என்று கூறினீர். விஸ்கல் ரைடுவின் துணிச்சல்மிக்க மரணத்தை நாங்கள் எவ்வளவாய் மதிக்கிறோம், ஆனால் அவர் ஒரு அழிவுக்குரியவர். அவரால் மரிக்க மட்டும் செய்ய முடியும், அதையே அவர் விட்டுச் சென்றார். ஆனால் நீர் மரிக்கவும் எங்களை மீட்டுக் கொள்ளவும், எங்களைக் கொண்டு வரவும், எங்களின் அன்பானவர்களிடமிருந்தல்ல, ஆனால் எங்களின் அன்பானவர் களிடத்தில் கூட்டிச் சேர்க்கவும், எங்களுடைய வீடுகளில் இருந்தல்ல, ஆனால் எங்களுடைய வீடுகளுக்கு, மரண இருளின் வழியாக ஒரு கோட்டை வெட்டவும், அங்கே தேவனுடைய ஆசிர்வாதங்கள் குவிந்து கிடக்கிற அந்த இடத்தை அதன் மூலமாக நாங்கள் காலத்திரைக்கப்பால் காணவும் செய்தீர். 160. மேலும் இப்போது, அன்புள்ள பிதாவே, இன்று, உம்முடைய பிள்ளைகள் அங்கே யாராவது இருந்தால், கல்குவாரியில் இருந்த அவர்களை ஜீவனுக்கேதுவாய் உம்முடைய சுவிசேஷத்தினால் உடைத்து எடுத்திருக்கிறீர், அவர்களை உருவாக்க விருப்பம் கொண்டு, இந்தக் காலை வேளையில் அவர்களை உடைத்தும் கொண்டிருக்கிறீர், மேலும் அவர்களைச் செதுக்கிக் கொண்டிருக்கிறீர், அவர்கள் பழக்க வழக்கங்களை அறுத்துப் போடுகிறீர், அவர்களுடைய அசுத்தமான எண்ணங்களை அகற்றுகிறீர், பின்புரனி பேசுவதையும், பின்வாங்கிப் போகுதலையும் கடிந்து கொண்டு, இப்போது அவர்களை மறுபடியும் கட்டிடத்திற்குச் சரியாகப் பொருந்தும் படி அதனதன் இடத்தில் வைக்கிறீர், இப்போதே அவர்களுடைய இருதயத்தில் பேசுவீரா? 161. எங்கள் தலைகளைத் தாழ்த்தியிருக்கும் வேளையில், இன்று சில பிள்ளைகள் இங்கே இருக்கலாம், அவர்கள் பாதையிலிருந்து வழி தவறினவர்கள் அல்லது ஒருவேளை பாதைக்கு ஒருபோதும் வராதவராயிருக்கலாம், ஆனால் இன்று நீர் அவர்களைப் பாதையில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும், தேவனுடைய மாளிகையில் அவர்கள் பொருத்தப்படக்கூடிய கற்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர், கிறிஸ்துவிற்கு நேராக உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா, உயர்த்தி, "கிறிஸ்துவே, என்னுடைய உலகப்பிரகாரமான தன்மையை என்னை விட்டு எடுத்துப் போடும்" என்று கூறுவீர்களா? 162. பின்னால் இருக்கும் வாலிப மனிதனே, தேவன் உங்களைத் ஆசீர்வதிப்பாராக, சீமாட்டியே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என் சகோதரியே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர் வதிப்பாராக. வேறு யாராவது இருக்கிறீர்களா? 163. இப்போது, நாம் பரிசுத்த ஆவிக்காக காத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நம்முடைய தலைகள் தாழ்ந்திருப்பதாக. நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந் துள்ளீர்களா அல்லது இல்லையா என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுடைய மகத்தான ஜெயம் கொண்டவர், "வா, என்னைப் பின்பற்று, உன்னுடைய சிலுவையை எடுத்துக் கொள், உன்னை வெறுத்து விடு. என்னைப் பின்பற்றி வா, எதிரிகளின் இராணுவ அரண்களைத் தகர்த்துப் போடுகிறேன். பாவத்தின் அரண்களை நான் தகர்த்துப் போடுகிறேன், வியாதி களின் அரண்களை நான் தகர்த்துப் போடுகிறேன். என்னைப் பின்பற்றி வாருங்கள், உங்களால் எவ்வளவு சிறப்பாக போரிட முடியுமோ அவ்வளவு சிறப்பாய்ப் போரிடுங்கள், ஏனென்றால் அதன் வழியாக ஒரு திறப்பை உண்டாக்குவேன், நம்முடைய வீடுகள் நித்திய ஜீவனுக்கென்று பாதுகாக்கப்படும்." 164 தேவனை விட்டுத் தூரம் போய் நீங்கள் அந்நியனாய் இருக்கிறீர்களா? சற்றே உங்கள் கரங்களை உயர்த்துங்கள்... சிறிய சக நண்பனே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, யாரோ ஒருவர், அவர்கள் கரங்களை ஒருபோதும் உயர்த்தினதில்லை, அவர்கள் கரங்களை உயர்த்த வேண்டும் என்று விரும்புகிறார்கள், அப்படிப் பட்டவர்கள், "சகோதரன் பிரன்ஹாமே என்னை நினைவு கூறுங்கள். இன்று இப்போதே கிறிஸ்துவிடம் வர விரும்புகிறேன். நான்..." என்று கூறுங்கள். சகோதரியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 165. "நான் அவருடைய இயந்திரத்தினால் வெட்டப்படவும், செதுக்கப்படவும் இப்போதே கிறிஸ்துவிடம் வர விரும்புகிறேன். இந்தக் காலை வேளையில் ஏதோ ஒன்று என் இருதயத்தைத் தொட்டது. எனக்குள் ஒரு அசைவு உண்டானது. உலகத்தின் அசுத்தங்கள் யாவையும், எல்லா பழக்க வழக்கங்களையும் இங்கேயே விட்டுவிடுகிறேன். பூமியின் குப்பையும் மண்ணும் வெளிப்படுத்தப் பட்டது, அது என்னை மூடியிருந்தது, ஆனால் இந்நாளில் சுவிசேஷ நற்செய்தி அவைகளை அந்தத் திரையை நீக்கிப் போட்டது. நான் குற்றமுள்ளவனாக தேவனுக்கு முன் நிற்கிறேன், நான் அதை அறிவேன். தேவன் என்னை ஒரு கல்லாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன், அதிலிருந்து என்னை அவர் செதுக்கவேண்டும், கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், பரிசுத்த ஆவியினிடத்திலும் பாவங்களை அறிக்கை செய்யவேண்டும், அவருடைய இராஜ்ஜியத்தில் என்னையும் சேர்த்துக் கொள்வாராக, இடம் கொடுப்பாராக. இன்று என் பாவங்கள் அனைத்தும் வெளிப் படுத்தப்பட விரும்புகிறேன். அவ்வாறு வெளிப் படுத்தப்பட்டு, நான் செதுக்கப்பட விரும்புகிறேன், செதுக்கப்பட்டு அவருடைய இராஜ்ஜியத்தில் நான் வைக்கப்பட வேண்டும்." பாவிகளுக்காக நாம் ஜெபம் ஏறெடுப்பதற்கு முன்பதாக அவரை நோக்கி உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா. எல்லாம் சரியாயிருக்கிறது. 166. அங்கே நான்கு அல்லது ஐந்து கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. நான் உங்களுக்காக ஜெபிப் பேன். இப்போது, ஒருவேளை பீட அழைப்பைக் கொடுப்பதற்கு நமக்கு வழியில்லை. ஒரு வேலை கொஞ்ச நேரத்திற்குக் காத்திருப்பீர்களேயானால், வியாதியஸ்தருக்கு ஜெபித்த பிறகு, உங்களை அழைக்கப் போகிறேன், நீங்களும் இங்கே மேலே இருக்க விரும்புகிறேன். ஆனால், இப்போது உங்களுக்காக ஜெபிக்கப் போகிறேன், இந்த மணி வேளையில் விசேஷித்த ஏதோ ஒன்றை உங்களுக்கு அருளிச் செய்வார். 167. எங்கள் பரலோக பிதாவே, உம்முடைய பரிசுத்த வார்த்தையில் இது எழுதப்பட்டுள்ளது, உம்முடைய எழுத்தாளனாகிய பரிசுத்த மத்தேயு 5வது அதிகாரம் 24வது வசனத்தில் எழுதப்பட்ட படி, "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." [தீர்க்கதரிசி யோவான் 5:24 என்பதற்கு பதிலாக மத்தேயு 5:24 என்று கூறுகிறார் - தமிழாக்கியோன்). 168. தங்கள் கரங்களை உயர்த்தியுள்ள ஒவ்வொரு வருக்காகவும், உம்முடைய தாழ்மையுள்ள பலவீனமான ஊழியக்காரனின் விண்ணப்பத்தைக் கேட்டருளும். "என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளா விட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரான்" என்று நீர் கூறியுள்ளீர். இந்தக் காலை வேளையில் அவர்களை இழுத்துக் கொண்டிருக்கிறீர், அதை அவர்கள் கேட்டார்கள், அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளனர். "விசுவாசம் கேள்வியினால் வரும், வார்த்தையைக் கேட்பதினால் வரும்." மேலும் நான் அவர்களுக்காக நன்றி கூறுகிறேன், இன்று ஒவ்வொரு விசுவாசியையும் பரிசுத்தப்படுத்தி, பரிசுத்த ஆவியினால் நிரப்புவீராக, இந்தக் காலை வேளையில் உலகத்தை வெறுத்து, தங்களை வெறுமையாக்கித் தாகத்துடன் இருக்கும் இருதயங்களை நிரப்புவீராக, மேலும் பிதாவின் கட்டிடத்தில் சரியாகப் பொருந்தும் ஒரு கல்லாக இருக்கும்படி இழைக்கப்படும்படி வாஞ்சையுள்ளவர்களாய் இருக்கின்றனர். இவைகளை நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். 169. நீங்கள் சற்று வித்தியாசமாக உணர வில்லையா? பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை எடுத்து தேய்த்து எடுக்கும் தூரிகையைப் போல,உலகத்தின் எல்லாக் காரியங்களையும் உங்களை விட்டு சுரண்டி, எடுத்து தேய்த்துப் போடவில்லையா? அப்படியானால் நீங்கள் புதிதாய் உணருங்கள். இப்போது தேவனுடைய மகிமைக்கென்று இன்னும் ஒரு முறை இந்த மகிமையான பழைய கீர்த்தனையைப் பாடுவோம். இம்மானுவேல் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே. எல்லோரும் சேர்ந்து பாடுவோம், தொடங்குவோம். இம்மானுவேல் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே, பாவிகள் அனைவரும் அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்குகின்றனர், எப்பாவத் தீங்கும் அதனால் நிவர்த்தியாகுமே. நிவர்த்தியாகுமே நிவர்த்தியாகுமே நிவர்த்தியாகுமே. பாவிகள் அனைவரும் அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்குகின்றனர், எப்பாவத் தீங்கும் அதனால் நிவர்த்தியாகுமே. 170. இப்பொழுது ஏதோ, ஒன்றை உங்களிடம் கேட்கப் போகிறேன். உங்களுடைய எல்லா பாவமும் இரத்தத்தின் கீழ் இருக்கிறது என்று உங்களில் எத்தனை பேர் உணர்கிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்து வீர்களா? "இப்போது நான் தேவன் என்னை மன்னித்து விட்டார் என்று விசுவாசிக்கிறேன். மேலும் நான்-நான் அவருடைய புத்திரனாயிருக்கிறேன்." ஓ, என்னே! இப்போது, அந்த மரித்துக்கொண்டிருந்த கள்ளன், அவனுடைய நாட்களில் அந்த ஊற்றைக் கண்டு பூரிப்படைந்தான். அவன் மரித்துக் கொண்டிருந்தான். அவனுடைய நாட்களில் அந்த ஊற்றைக் கண்டு பூரிப்படைந்தான். அங்கே நான் இருக்கட்டும், அவனைப் போல மாபாவியாக இருந்தாலும், எல்லாப் பாவங்களையும் கழுவி சுத்திகரியும். 171. இந்த வரியில் உள்ள பல்லவியைப் நாம் பாடும் போது, யார் உங்கள் அருகில் உள்ளாரோ அவருடைய கையைப் பிடித்து நீங்கள் குலுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், "தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, கிறிஸ்தவ சகோதரனே, சகோதரியே," என்று கூறுங்கள். அது யாராக இருந்தாலும் சரி. இப்போது, அதன் முதல் வரியை கர்த்தருக்கென்று நாம் பாடுவோம். நம்மால் முடிந்தால் நம்முடைய கரங்களை உயர்த்துவோம், பாடுவோம், அந்த மரித்துக் கொண்டிருந்த கள்ளன், இப்போது அந்தப் பல்லவியைப் பாடும் போது கைகளைக் குலுக்கிக் கொள்ளுங்கள். மாபாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான் மன்னிப்பும் மோட்சானந்தமும் அடைந்து பூரித்தான், பிதாவே, இப்போது நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். அவனைப் போல மாபாவியாயிருந்தாலும், அங்கே நான் இருப்பேனாக, எல்லாப் பாவங்களையும் கழுவி சுத்திகரியும். எல்லாப் பாவங்களையும் கழுவி சுத்திகரியும், எல்லாப் பாவங்களையும் கழுவி சுத்திகரியும்; இப்போது, ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொள்ளுங்கள். அவனைப் போல மாபாவியாயிருந்தாலும்... எல்லாப் பாவங்களையும் கழுவி சுத்திகரியும். 172. இன்று நாம் கிறிஸ்தவ விசுவாசிகளாகவும், இராஜ்ஜியத்தின் குடிமக்களாகவும் இருப்பதில் எவ்வளவு மகிழ்ச்சியாய் உள்ளோம். ஏனென்றால் தேவன் நம் பாவங்கள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்துவிட்டார். இயேசு கிறிஸ்துவுக்குள் நம்மைப் புது சிருஷ்டிகளாக்கியிருக்கிறார். இப்போது, கர்த்தருக்காக மகிழ்ச்சி யுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? [கூட்டத்தினர் "ஆமென்" என்று கூறுகின்றனர் -ஆசி] அதிசயமானவர்! 173. இப்போது, நினைவில் கொள்ளுங்கள். நண்பர்களே, கூட்டங்கள் இன்று மாலையில் இதே இடத்தில் மறுபடியும் தொடங்கும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 174. இன்று காலையில் நான் கூட்டத்தை முடிக்க எண்ணிய நேரத்தைக் காட்டிலும் சற்று அதிக நேரம் எடுத்துக் கொண்டேன். இந்தக் கூட்டம் முடிந்தவுடன் நான் ஒருவரை சந்திப்பதற்கு நேரம் கொடுத்துள்ளேன், மேலும் ஒரு சில அன்பார்ந்த நண்பர்களாகிய உங்களைச் சந்திக்க வேண்டும். சாயங்காலம் வரை நம்மால் அதை தள்ளி போட முடியுமா என்று நான் வியப்படைகிறேன். இன்று இரவு கூட்டத்திற்கு திரும்ப வரும் போது, ஏனென்றால் நான் சற்றே பதினோரு மணிக்குள் நான் இங்கே இருக்க வேண்டும், இப்போது நாம் அதை அடையவேண்டும்... ஜெபத்திற்காக எத்தனை பேர் உள்ளீர்கள்? உயர்த்தப்பட்ட கரங்களை நான் பார்க்கட்டும், எல்லா இடங்களிலும் உயர்த்தப் பட்டுள்ளன. ஒரு பெரிய கூட்டத்தாருக்காக நாம் ஜெபிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். [ஒலி நாடாவில் காலியிடம் -ஆசி]. 175. அங்கே மேலே இருக்கும் லுத்தரன் சபையைச் சார்ந்த மனிதன் என்னை கண்டனம் செய்து எவ்வாறு கடிதம் எழுதினார் என்று நான் உங்களுக்குக் கூறியுள்ளேன். மேலும், நான் எப்படிப்பட்ட மனிதன் என்றும், நான் ஜனங்களுக்கு பிரசங்கம் செய்வதையும், பிசாசினால் சுகமாக்க முடியாது என்றும் அதுபோல... எவ்வளவு இனிமையாக அதற்கு பதில் அளிக்க வேண்டுமோ அவ்வாறு பதில் அளித்தேன், எனக்குத் தெரிந்தமட்டில் பதில் அளித்தேன். 176. அதற்கு அவர் திரும்ப ஒரு கடிதம் எழுதினார் அதில், "வியாபாரிகள் கூட்டத்தில் நான் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்" என்று எழுதியிருந்தார். 177. மேலும் நான்-மேலும் நான் சகோதரன் மூர் அவர்களை, அவருக்கு ஒரு இடம் ஒதுக்க முடியுமா என்று கேட்டேன். அவர் "ஆம்" என்று கூறினார். 178. அவர்கள் என்னை அங்கிருந்து லுத்தரன் வேத பாடசாலைக்கு அழைத்துச் சென்றனர், அங்கே விருந்து உணவுக்காக அமர்ந்தோம், அங்கு அனைத்து மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் இருந்தனர்... அவர் தான் அந்த வேத பாடசாலையின் முதல்வர்; அவர் எனக்கு அருகில் அமர்ந்தார், நாங்கள் அந்த விருந்தை சேர்ந்து உண்டோம். அவர்கள் ஜெர்மானியர்களாய் இருந்தனர். அவர்கள் ஒரு-ஒரு-ஒரு பெரிய விருந்தை வைத்தனர், மேலும்- கனம் பொருந்திய ஸ்திரிகள் அவர்கள் எல்லோரும் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அந்த விருந்து முடிந்தவுடன், இந்த லுத்தரன் கல்லூரியின் முதல்வர், எழுந்து நின்று, "சகோதரன் பிரன்ஹாமே நான் ஒரு நோக்கத்திற்காக உங்களை இங்கு அழைத்துக்கொண்டு வந்துள்ளேன்" என்று கூறினார். அவர், "அது என்னவென்றால், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் நாங்கள் தேவனைக் காண விரும்புகிறோம்" என்றார். நான் அவரை நோக்கிப் பார்த்தேன், நான் சகோதரன் மூர் அவர்களைப் பார்த்தேன், சகோதரன் மூர் என்னை நோக்கிப் பார்த்தார். அவர், "சகோதரன் பிரன்ஹாம் நான் உங்களைக் குற்றப்படுத்தினேன், அதற்காக நான் வருந்துகிறேன்" என்றார். "சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் தான் சரி. அதற்காக என்னை மன்னிக்கும் படி வேண்டுகிறேன். இப்போது, நாங்கள் விரும்புவது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையே" என்றார். "நாங்கள் அநேக காரியங்களை, நாற்காலிகளை உதைத்து தள்ளுவது, பொருட்களை கிழிப்பது போன்றவைகளைப் பார்த்துள்ளோம்" என்றார். ஆனால், "எங்களுக்கு உண்மையான பரிசுத்த ஆவி வேண்டும், அதையே விரும்புகிறோம்" என்றார். 179. நான், "நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?" என்று கேட்டேன், அவர் சொன்னார்... நான், லுத்தரன் வேத பாடசாலை என்றால் என்ன... லுத்தரன் ஸ்தாபனம் என்றால் என்ன? என்று கேட்டேன். 180. அவர் "லுத்தரன் ஸ்தாபனம் என்ன கூறுகிறது என்பதை குறித்துக் கவலை இல்லை; எங்களுக்கு கிறிஸ்து வேண்டும்" என்றார். 181. பாப் ஷீலர் (Bob Shuler) மற்றும் அவரைச் சார்ந்தவர்கள், கிறிஸ்துவ தூதன் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களாயிருந்தனர், பில்லியின் இருதயத்திற்கேற்ற நண்பர் மற்றும் அநேகர் அங்கிருந்தனர்-அங்கிருந்த சகோதரர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளத் தாகமாயிருந்தனர். அதன்பின் நான் கூறினேன்... அவர், "இது லுத்தரன்களுக்கா? " என்று கேட்டார். நான், "இது யார் யார் எல்லாம் வாஞ்சையுள்ளவர்களோ அவர்கள் வரட்டும், இது அவர்களுக்குத் தான்" என்றேன். அவர்"அதை நாம் எவ்வாறு பெற்றுக் கொள்வது?" என்றார். நான், "நீங்கள் உண்மையாகவே உத்தமமாயிருக்கிறீர்களா?" என்று கேட்டேன். 182. அவர், "ஆம், சகோதரன் பிரன்ஹாம், உள்ளத்தின் ஆழத்திலிருந்து" என்று கூறினார். "மாணவர்களாகிய உங்களுடைய காரியம் என்ன?" என்று நான் கேட்டேன். 183. எல்லோருடைய கைகளும் உயர்த்தப்பட்டன, கண்ணீர் அவர்கள் கன்னங்களில் ஓடிக்கொண்டிருந்தது, "எங்களுக்கு இயேசு வேண்டும்" என்று கூறினார்கள். 184. "உங்கள் தட்டுகளையெல்லாம் பின்னால் போடுங்கள், உங்களின் நீண்ட இருக்கைப் பலகைகளை எடுத்துக் கொள்ளுங்கள், அவைகளை சுவர் ஓரமாய் வேகமாய்த் தள்ளுங்கள்" என்று நான் கூறினேன். சுற்றிலும் இருந்த ஒவ்வொரு மனிதனும் அவ்வாறே செய்தனர். "இப்போது முழங்காற்படியிட்டு, சுவர் பக்கமாய் உங்கள் முகத்தைத் திருப்புங்கள்" என்று நான் கூறினேன். பரிசுத்த ஆவிக்காகத் தேவனிடத்தில் கேட்கத் தொடங்குங்கள். மேலும் சகோதரன் மூர் அவர்களை அங்கே நின்று ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டேன். நான் சென்று ஒவ்வொருவர் தலைமீதும் கைகளை வைத்தேன், மொத்தம் எழுபத்திரெண்டு மாணவர்கள், அந்தக் கல்லூரியின் முதல்வரும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றனர். மேலும் அவர்கள் தேவனுடைய கிரியைகளினாலும், அற்புதங் களினாலும் அந்த தேசத்தை அசைத்துக் கொண்டி ருக்கிறார்கள். லுத்தரன் பாடசாலை, அவர்கள் சுகமளிக்கும் கூட்டங்களையும் மற்றும் எல்லா வற்றையும் நடத்துகிறார்கள். 185. ஓ, என் இருதயத்தில் உள்ளவைகளை யெல்லாம் ஊற்றி நான் பாட வேண்டும். ஏன்? நீங்கள் பசியாயும், தாகமாயும் இருக்கும்போது... 186. இந்த ஏழை சிறிய ஸ்திரீ இங்கே படுத்து புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கிறார்கள், நிச்சயமாக இந்தக் காலை வேளையில் தேவன் அவர்களைச் சுகப்படுத்த வேண்டும் என்று பசியோடும் தாகத்தோடும் இருக்கிறார்கள். இருதய நோயினால் உங்களில் அநேகர் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். நிச்சயமாக, தேவன் உங்களைச் சுகப்படுத்தவில்லை என்றால், இப்போதே நீங்கள் மரிக்கப் போகிறீர்கள். மற்ற நோய்களினாலும், வேதனைகளினாலும் அநேகர் இங்கே இருக்கிறீர்கள், அது மிகவும் மோசமானது, ஆனால் நண்பர்களே, நியாயத்தீர்ப்பை எதிர்பார்க்காதீர்கள். நீதிக்காக உங்களால் கிரயம் செலுத்த முடியாது. நியாயப் பிரமாணத்தைப் பார்க்காதீர்கள், ஏனென்றால் நியாயப் பிரமாணத்தைக் கடைபிடிக்க முடியாது. ஆனால், இயேசுவை மாத்திரம் நோக்கிப்பாருங்கள், அவர் ஒருவரே உன்னை மீட்டவர், அவருடைய நாமத்தின் மேல் உள்ள விசுவாசத்தினாலே, இந்தக் காலை வேளையில் நீங்கள் சுகமாக்கப்படுவீர்கள். 187. சுவிசேஷத்தைப் பிரசிங்கிப்பதற்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துடன் எழுபது லுத்தரன்-லுத்தரன் ஊழியக்காரர்களை அனுப்புவாரென்றால்... கரங்களை வைப்பதன் மூலமாக... இயேசு கூறினார், வொன் விஸ்கல்ரைடு போல அவர் நமக்குப் போர் முறையைக் கொடுக்கும் போது; அவர் சொன்னார்... நம்மிடத்தில் என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு யுத்தம் செய்யுங்கள். இங்கேயே தான் அவர் சொன்னார் "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்; என்னுடைய நாமத்தினாலே அசுத்த ஆவிகளை அல்லது பிசாசுகளைத் துரத்துவார்கள்; அவர்கள் நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பம் அவர்களைத் தீண்டினாலும், அவர்களைச் சேதப்படுத்த முடியாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சுகமடைவார்கள்" என்று அவர் கூறினார். 188. மகத்தான செதுக்குதலைப் பாருங்கள், இப்போது தூக்கு நூல் உலகம் பூராவும் சுற்றுகிறது. சுவிசேஷம் சென்று கொண்டிருக்கிறது, ஆதாமின் புத்திரர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் வழி யெல்லாம் யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள், இப்போது எதிரிகள் ஒரு கோட்டை-பாதையை உண்டாக்குகின்றனர், நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். 189. மேலும் ஜனங்களாகிய நீங்கள் சுகமாயிருப் பதினால், இந்தக் காலை வேளையில், நல்ல சுகத்தைப் பாராட்டுகிறவர்களே, நாம் ஜெபிக்கும் போது அவர்களை நினைவு கூறுவோம். 190. வியாதியஸ்தர்கள் இந்தப் பக்கமாக, எனக்கு வலது பக்கத்தில் வரிசையாக நிற்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். மூப்பர்கள் உங்களுக்குச் சித்தமானால் வந்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள். மேலும் சுவிசேஷ ஊழியர்களை இங்கே வந்து நிற்கும் படியாகக் கேட்டுக் கொள்கிறேன், நெருங்கி ஜெபியுங்கள். 191. மேலும், உங்களால் உதவிசெய்யக் கூடு மானால் சென்றுவிடாதீர்கள், சற்று நேரத்திற்கு பின் நாம் இன்னும் ஒரு பீட அழைப்பை விரும்புகிறேன். நம்மால் எவ்வளவு துரிதமாகச் செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக அதைச் செய்வோம். கூட்டங்கள் இந்த சுகமாக்குதல் கூட்டத்துடன் முடிவடையாது. 192. இப்போது, இந்த பக்கம் வந்து வரிசையாய் நில்லுங்கள். நம்முடைய அன்பான சகோதரன் நெவில் அவர்களை நாம் கேட்கப் போகிறோம், நாம் வழக்க மாகச் செய்வதுபோல வழி நடத்துவாரானால், அவர்களால் கூடுமானால்... சகோதரியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது என்னவாக இருந்தது? [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி] நம்பிடுவாய், நம்பிடுவாய், சகலமும் கைகூடிமே, நம்பிடுவாய்; நம்பிடுவாய் ... 193. அது எந்த வழி? கவனியுங்கள். இயேசுவினிடத்தில் போகும் வழி. மருத்துவர்கள் கைவிட்டு விட்டார்கள். கடைசியாக இருப்பது எல்லாமும் தோல்வியடைந்துவிட்டது. "ஆனால் இவர் என் நேச குமாரன், இவருக்கு செவி கொடுங்கள்." அவர் என்ன கூறினார்? அவர், "இவருக்கு செவி கொடுங்கள்" என்று கூறினார். அவர் என்ன கூறினார். அவர் என்ன கூறினார்? நம்பிடுவாய் ஏன்? "சகலமும் கைகூடிடும்." பயப்படாதே, சிறு மந்தையே, சிலுவையிலிருந்து சிங்காசனத்திற்கு, மரணத்திலிருந்து ஜீவனுக்கு, அவர் தனிமையாகவே சென்றார்; அவருடைய... பூமியில் சகல வல்லமையும், உன்னதத்தின் சகல வல்லமையும், அவருடைய நேசம்மிகுந்த மந்தைக்கு என்று அவருக்கு கொடுக்கப்பட்டது. 194. வியாதிகள் மேல் எல்லா வல்லமையும், சகலமும் அவருக்குக் கொடுக்கப்பட்டது மேலே... இவருக்கு செவி கொடுங்கள். நம்பிடுவாய்! ... நம்பிடுவாய் சகலமும் ... 195. நியாயப்பிரமாணம் ஒன்றும் செய்யமுடியாத போது, மருத்துவர்கள் கைவிட்ட போது, எல்லாக் காரியங்களும் தோற்றுப் போன போது, அவர் என்ன சொன்னார், விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி]. 196. கிட்டத்தட்ட நூறு பேர், நான் அவ்வாறு யூகிக்கிறேன். அவர்களில் சிலர் சக்கர நாற்காலியில் வந்து கொண்டிருக்கிறார்கள், ஒருவர் இங்கே படுக்கைத் தள்ளுவண்டியில் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார். 197. உங்களுடைய பிரியமான மருத்துவர்கள், மனிதர்கள் என்ற நிலையில் சரீரத்தை வெட்டிப் பிளப்பவர்கள், உடற்கூறு இயல், அவர்களுடைய அறிவுக்கு எட்டின வரையில் அவர்களால் முடிந்த அளவுக்கு எல்லாவற்றையும் பார்க்கிறார்கள், ஜீவனை காப்பாற்ற முயற்சிசெய்கிறார்கள், ஆனால் அநேக சமயங்களில் தோற்றுப் போய் விடுகிறார்கள். 198. நாம் மிகுந்த மகிழ்ச்சியுடையவர்களாய் இருக்கிறோம். ஏனென்றால், இந்தப் பிரகாசமுள்ள மகிமையின் மேகம் அவர்கள் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது, "ஆனால் இவர் என் நேசகுமாரன்" என்று கூறினார். நியாயப்பிரமாணம் தோற்றுப் போன போது, அதை சந்திப்பதற்கு நீதியும் தோற்றுப் போன போது, பின் தேவன், "இவருக்குச் செவி கொடுங்கள்" என்று கூறினார். அவர் என்ன கூறினார்? "நீங்கள் விசு வாசித்தால் மட்டும் போதும், சகலமும் கைகூடிடும்." எங்கள் அவிசுவாசம் நீங்க நீர் எங்களுக்கு உதவி செய்யும். 199. சுவிசேஷ ஊழியர்கள் என்ற நிலையில், இப்பொழுது சென்று வியாதியஸ்தரை அபிஷேகம் செய்வோம், அவர்கள் மீது நமது கைகளை வைப்போம், கர்த்தருக்கென்று அர்ப்பணித்த இந்தக் கூடாரத்தைச் சார்ந்த ஜனங்கள் ஜெபத்தில் ஒன்றாய் இணைந் துள்ளனர்.தேவன் நம்முடைய முயற்சியை ஆசீர்வதித்து வியாதியஸ்தரை சுகப்படுத்துவாராக. இவைகளை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். 200. உங்கள் தலைகளை ஜெபத்தில் தாழ்த்தி இருக்கும் போது, கூட்டத்தினர் "விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள்" (நம்பிடுவாய் என்ற பாடலை மெல்லிய குரலில் பாடுகின்றனர்]. சகோதரன் நெவில் அபிஷேகம் செய்வார். நான் வியாதியஸ்தர்கள் மேல் கரங்களை வைப்பேன். 201. அன்புள்ள பரலோக பிதாவே, புதியதாய் மேடைக்குப் பின்னால் இருந்து நாங்கள் மரணத்திற்கும் ஜீவனத்துக்கும் இடையில் நின்று கொண்டிருக்கிறோம், பாவிகளுக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையில் தப்பி போவதற்கான வழியை அவர்களுக்கு சுட்டிக் காட்டுகிறோம், நான் இப்போது பின்னால் இருந்து நடந்து செல்கிறேன், வியாதிப்பட்ட இந்த ஸ்திரியின் மேல் என் கரங்களை வைக்கிறேன், அன்பானவர்கள் நின்று கொண்டிருப்பது போலவும் அவர்களைக் கவனிப்பதுமாய் இருக்கிறார்கள்; இப்போது ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் நீர் உதவி செய்ய முடியும். நீர் பிரதிஷ்டை செய்தவிதமாக நான் என்னுடைய கரங்களை அவர்கள் மீது வைக்கிறேன்... ஆமென். [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி]. 2